English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
camlet
n. ஒட்டக மயிர் ஆடை வகை, கம்பளி ஆடை வகை.
cammock
n. (தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை.
camomile
n. செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை.
Camorra
n. (இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு, இரகசியச் சங்கம்.
camouflage
n. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள்.
camouflet
n. (பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர், எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி.
camp-bed
n. மடக்குப் படுக்கை.
camp-chair
n. மடக்கு நாற்காலி.
camp-colour
n. குறியிடுவதற்குப் பயன்படும் கொடி.
camp-fever
n. கூடாரக்காய்ச்சல், கூடாரங்களில் வரக் கூடிய குடற்காய்ச்சல் நோய் போல்வது.
camp-follower
n. இராணுவக்குழுவோடு செல்லும் பரிவாரத்தார்.
camp-meeting
n. கூடாரங்களில் திறந்த வெளியின்கண் கூடும் சமயக்கூட்டம்.
Campagna
n. இத்தாலிய சமவெளி.
campaign
n. களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம், நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல், போராட்ட ஈடுபாடு, வினையாள் முறை, (வி.) போர் வினையில் ஈடுபடு.
campaigner
n. பல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர், போரனுபவம் உடையவர்.
campana
n. மணிபோன்ற வடிவுள்ள பொருள், மலர் வகை.
campaniform
a. மணி வடிவான, மணிபோன்ற அமைப்புள்ள.
campanile
n. மணிக்கூண்டு, தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு.
campanist
n. ஒலிக்கும் மணியாளர்.