English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
conference
n. சேர்ந்து உரையாடல், கலந்தாய்வு, கலந்தாய்வுக் கூட்டம், மாநாடு, மெதடிஸ்ட் திருச்சபையினரின் ஆண்டுக்கூட்டம்.
conferment
n. அளித்தல், அளிப்பு, வழங்கல், வழங்கப்பட்ட பொருள்.
confess
v. குற்றத்தை ஒப்புக்கொள், முழுமையும் வெளிப்படத் தெரிவித்துவிடு, தானாக ஏற்றுக்கொள், செய்த பாவங்களைச் சமயகுருமாரிடம் முறைபடத் தெரிவித்துவிடு, சமயகுருமார்வகையில் பாவ அறிவிப்பை ஏற்றுக்கொள்.
confessed
a. ஒப்புக்கொள்ளப்பட்ட, உறுதியான, தௌிவான, வெளிப்படையான.
confession
n. குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை, குறை ஏற்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி, வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை, சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை, சமயக்கோட்பாடு அறிவிப்பு, பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
confessional
n. பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, சமய குரவரின் பாவமன்னிப்பறை, பாவமன்னிப்பு முறைமை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
confessionary
n. சமயகுரவர் பாவமன்னிப்புக் கேட்கும் இருக்கை, (பெ.) பாவமன்னிப்புக் குறித்த.
confessionist
n. வரையறுக்கப்பட்ட சமயக்கொள்கையைக் கடைப்பிடிப்பவர், மார்ட்டின் லுதர் கோட்பாடு பின்பற்றுபவர்.
confessor
n. பாவங்களை ஒப்புக்கொள்பவர், பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர், இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
confettI
n. pl. தித்திப்புப்பண்டம், தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள், திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
confidant
n. நம்பகமானவன், அணுக்கத் துணைவன், காதல் துணைவன், பாங்கன்.
confide
v. நம்பிக்கை வை, முழுவதும் நம்பு, நம்பியிரு, நம்பிச் செயலாற்று, நம்பிக்கையாகத் தெரிவி, நம்பி ஒப்படை.
confidence
n. உறுதியான நம்பிக்கை, நம்பத்தன்மை, பற்றுறுதி, தன்னம்பிக்கை, ஆர்வ நம்பிக்கை, துணிவார்வம், தன் முனைப்பு, மறை செய்தி, இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
confident
n. நம்பிக்கைக்குரிய நண்பர், அந்தரங்கத் தோழர், (பெ.) உறுதியாக நம்புகிற, ஆர்வத்துடன் எதிர்பார்க்கிற, துணிவார்வமிக்க, மிகு முனைப்பான.
confidential
a. நம்பிக்கைக்குரிய, நம்பகமான, இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட, இரகசியமாக அறிவிக்கப்பட்ட, அந்தரங்கமான, தனிமனிதருக்குரிய, தனிப்பட்ட காரியங்களுக்குரிய, மறைவடக்கமான.
confider
n. நம்பிக்கை வைப்பவர், இரகசியம் சொல்லி வைப்பவர்.
confiding
a. நம்பியிருக்கும் இயல்புடைய, ஆர்வ நம்பிக்கையுடைய.
configurate
v. உருவங்கொடு, உருவாக்கு.
configuration
n. கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
configure
v. உருவங்கொடு, உருவாக்கு.