English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
conics
n. (வடி.) கூம்பு வெட்டளவையியல், கூம்பு பற்றியும் கூம்புகளைப் பற்றியும் ஆராயும் நுல் துறை.
conifer
n. குவிந்த காய் காய்க்கும் மரவகை.
coniferous
a. குவிந்த காய் காய்க்கிற, குவிந்த காய் காய்க்கிற மரப்பேரினத்தைச் சேர்ந்த.
coniform
a. கூம்பு வடிவமைந்த.
coniine
n. செடிவகையினின்று எடுக்கப்படும் வெடியக்கலப்புடைய கொடிய நச்சு நீர்.
conjecturable
a. ஊகிக்கத்தக்க.
conjectural
a. உய்த்துணர்வுக்குரிய, ஊகத்துக்கிடமான, ஊகம்பண்ணும் பழக்கமுடைய.
conjecture
n. முன்னறி கூற்று, ஊகம், சான்றில்லாமல் அல்லது அற்பச் சான்றினடியாகக் கொண்ட கருத்து, உய்த்துணர்வு, உத்தேசம், அனுமானம், கற்பனை, எண்ணம், (வி.) ஊகம் பண்ணு, அனுமானம்செய், குத்தாயமாகக் கருது, போதிய சான்றில்லாமல் கற்பனை செய்.
conjoin
-1 v. ஒருங்கிணை, ஒன்று சேர், பிணை, ஒன்றுபடு.
conjoined
a. ஒன்றிய, இணைக்கப்பட்ட.
conjoint
a. ஒருங்கிணைக்கப்பட்ட, கூட்டாளியான, கூட்டான.
conjugal
a. திருமணத்துக்குரிய, மணவாழ்க்கைக்குரிய, கணவன் மனைவியருக்குரிய, கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
Conjugatae
n. pl. (தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை.
conjugate
n. மூலமொத்த சொல், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று, (பெ.) இணைக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட, பிணைக்கப்பட்ட, (தாவ.) இரட்டையாக இயல்கிற, பரிமாற்றத் தொடர்பு பூண்ட, (கண.) துணையிய, (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய, (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட, (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு, வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு, இணைவுறு, மெய்யுறப்புணர், (உயி.) கலந்தொன்றுபடு, ஒருங்கு கல.
conjugated
a. இணைக்கப்பட்ட, இணையிணையான, (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
conjugation
n. ஒன்று சேர்த்தல், இணைவு, (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி, வினைக்கணம், வினைத்திரிபு அமைவுக்குழு, (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
conjugational
a. இணைந்த, இணைவான, கலந்திணைவது பற்றிய.
conjugative
a. கலந்திணையும் பாங்குள்ள.
conjunct
n. மற்றொருவருடன் சேர்க்கப்பட்டவர், மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட பொருள், (பெ.) ஒருங்குசேர்க்கப்பட்ட, இணைக்கப்பட்ட, இணைந்தியல்கின்ற, கூட்டிணையான.
conjunction
n. சந்திப்பு, இணைப்பு, நிகழ்ச்சிகளின் இணைவு, ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி, தொடர்புடைய மக்கள் கும்பு, தொடர்புடைய பொருள்களின் குவை, (இலக்.) இணையிடைச்சொல், சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல், (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.