English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
councillor
n. மன்ற உறுப்பினர்.
councilman
n. நகராட்சிக் கழக உறுப்பினர்.
counsel
n. கலந்தாய்வு, கலந்து பேசுதல், அறிவுரை, கருத்துரை, கட்டளை, திட்டம், நோக்கம், தனி மறைவான செய்தி, வழக்குரைஞர், வழக்குரைஞர் குழு, (வி.) அறிவுரை கூறு, பரிந்துரை நல்கு, எச்சரிக்கை செய்.
counsellable
a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய.
counsellor
n. அறிவுரை கூறுபவர், வழக்குரைஞர்.
count
-1 n. (வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர், கோமான், உயர் குடிமகன், பெருமகன்.
count-down
n. இறங்குமுகக் கணிப்பு, குறித்த நேரச்செயல் நடைமுறையில் செயல் நேரம் இன்மை எண் (0) ஆக வரவரக் குறையும்படி இடைநேரமமைத்தல்.
count-wheel
n. மணியாழி, மணிப்பொறி, மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி.
countable
a. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க.
counted
a. கணக்கிடப்பட்ட, மதிப்பிடப் பெற்ற, கணிக்கப்பட்ட.
countenance
n. முகம், முகத்தோற்றம், முகபாவம், முகஅமைதி, விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை, உவப்புவர்ப்புத் தோற்றம், இசைவுக் குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, (வி.) ஆதரவு காட்டு, உடன்பாடு தெரிவி.
counter
-1 n. எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை, (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.
counter-agent
n. எதிரிடையாகச் செய்யும் ஆற்றலுடைய பொருள், எதிரிடையாக்குபவர்.
counter-attack
n. எதிர்தாக்குதல், (வி.) தாக்குதலை எதிர்த்துத் தாக்கு, புறம் போந்து தாக்கு.
counter-attraction
n. எதிர்க்கவர்ச்சி, போட்டியான கவர்ச்சிக்கூறு.
counter-battery
n. (படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை.
counter-brace
n. (கப்.) முன்பாய்மர உச்சிப் பற்றிறுக்கி, (வி.) (கப்.) எதிரெதிராக இறுக்கிக் கட்டு.
counter-ceiling
n. மேல்தள அடுக்குகளுக்கிடையில் வைக்கப்படும் உலர் பொருள்.
counter-changed
a. பரிமாற்றம் செய்யப்பட்ட, குறுக்குக் கட்டமிடப்பட்ட, வண்ணங்கள் மாற்றப்பட்ட, நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
counter-claim
n. எதிர் உரிமைக் கோரிக்கை, எதிர்வழக்கீடு.