English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
court
n. வழக்கு மன்றம், நீதிபதிகள் குழாம், முறைநடுவர் குழு இருக்கை, வழக்கு மன்றக் கூட்டம், முற்றம், மதில் சூழ்ந்த அகவெளி, கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம், பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம், காட்சியரங்கக் கூடம், காட்சிச் சாலைப்பிரிவு, தெருப்பக்க அகக்கூடம், நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு, விளையாட்டுக்கூடம், கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி, அரண்மனை, அரசவை, மன்னவைக்குழாம், மன்னர் பரிவாரம், கொலுவிருக்கை, மன்னர் திருமுன் பேட்டி, அரசவைத் திருக்காட்சி, வணக்க இணக்க முறை, முகமன் முறை, நயநாகரிகப் புகழ்ச்சிமுறை, காதல் ஊடாட்டம், (வி.) காதல் நாடி ஊடாடு, ஆதரவு வேண்டி அணுகு, மதிப்புக்காட்டு, வணக்க இணக்கத்துடன் நடந்து கொள், நயந்துகொள், நாடு, தேடு, வரவழை, நாடிப்பபெறு, பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Court of Admiralty.
கப்பல்துறை நீதிமன்றம்.
court-baron
n. பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம்.
court-craft
n. அரசவைப் பண்பு, தன்னல மறைசூழ்ச்சி முறை.
court-day
n. நீதிமன்றம் அமரும் நாள்.
court-dress
n. அரசவை நாட்களில் அணியும் தனிச்சிறப்புடைய ஆடை.
court-dresser
n. முகப்புகழ்ச்சியாளர்.
court-fool
n. அரசவைக் கோமாளி, மன்னவை விகல்ன், கேலிக்கூத்தன்.
court-guide
n. அரசவை அறிமுகம் பெற்றவர் பட்டியல் ஏடு, நகரப் பெருமக்களின் பெயர்-முகவரி கொண்ட தகவல் திரட்டு.
court-hand
n. முற்காலங்களில் (16-1க்ஷ் ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு.
court-house
n. வழக்கு மன்ற மாளிகை.
court-martial
n. படைத்துறை முறைமன்றம், சிறப்புப் படை மன்றம், (வி.) படைத்துறை முறைமன்றத்தைக் கொண்டு விசாரணை செய்.
court-plaster
n. முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
court-roll
n. நீதிமன்றப் பதிவுப் பட்டியல் ஏடு.
court-sword
n. அரசவை உடையோடு அணியப்படும் மென்மையான வாள் வகை.
Courtelle
n. செயற்கை இழை அல்லது துகிலுக்குரிய வாணிக உரிமைப் பெயர்.
courteous
a. இணக்கவணக்கமான, அடக்கமான, அன்பாதரவான, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த, கடமை மனப்பாங்குடைய.
courtesan
n. அரசவையணங்கு, விலைமகள், பரத்தை.
courtesy
n. நயநாகரிக நடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசை முறை, நயநாகரிகச் செயல், மதிப்பு நயச் செயல், வணக்க முறை, அன்புரிமைச் சலுகை, (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை, (வி.) வணக்கம் செலுத்து.
courtesy title
n. சட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம்.