English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cranium
n. மண்டை ஓடு, மூளை பொதிந்த குடுவை, மூளையை மூடியுள்ள எலும்புகளின் கூட்டுத்தொகுதி.
crank
-1 n. வளைவு, கோட்டம், அள்ளு, செந்திரிப்புக்கோட்டம், இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு, பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம், திருகுவிட்டம், குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி, (பெ.) வளைந்த, இடுக்கப்பட்ட, (வி.) வளை, திருப்பு, கோடு, செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு, செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
crankle
n. வளைவு, திருப்பம், சுரிப்பு, திருக்கு முறுக்கு, (வி.) உள்ளும் புறமுமாக வளை, திருகி முறுக்கு.
cranky
a. வளைந்த, கோணலான, நொய்ய, உறுதியற்ற, வலுவற்ற, மனம்போன போக்கான, எண்ண ஒழுங்கற்ற, ஏடாகோடாமான.
crannied
a. பிளவுகளுள்ள, கீறல்களுடைய, வெடிப்புக்களுள்ள.
crannog
n. தீவரண், ஸ்காத்லாந்திலும் அயர்லாந்திலும் ஏரியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் அமையப்பெற்ற அரண்காப்புடைய தீவு, ஏரியகமனை.
cranny
n. பிளவு, கீறல், மறைவிடம், (வி.) பிளவுகளுக்குள் செல்.
crape
n. துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை, புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை, துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை, (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான, (வி.) மென்பட்டுத் துணி அணிவி, மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி, கரும்பட்டுத் துணியால் அணி செய், முடியைச் சுருளச் செய்.
crape-cloth
n. மெல்லிழைக் கரும்பட்டுப் போன்ற கம்பளித் துகில்.
craps
n. pl. பகடைக்காயைக் கொண்டு ஆடும் சூதாட்ட வகை.
crapulence
n. அளவு மீறிய குடியினால் உண்டாகும் நோய், மட்டுமீறிய குடி.
crapulent, crapulous
மட்டுமீறிய குடிக்கு ஆட்பட்ட, அளவறிந்த குடியினால் நோய்க்கு ஆளான.
crarmesy, cramoisy
மிகு சிவப்பு நிறம், செக்கர் நிறத்துகில் (பெ.) மிகு சிவப்பான.
crash
-1 n. தகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்கமிட்டு விழு, பேரொலியுடன் செலுத்து, இரைச்சலுடன் இயங்கு, துயர் முடிவெய்து, மோதி உடை, சென்று மோது, அழையாது திடீர் விருந்தினராக நுழை, விமான வகையில் விழுந்து சேதமுறு.
crash-dive
n. நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல், (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
crash-helmet
n. விமானம்-உந்துவண்டி-மிதி உந்துவண்டி ஆகிய வற்றின் ஓட்டிகளுக்குரிய பஞ்சுறையிட்ட பாதுகாப்புத் தலைக்கவசம்.
crash-land
v. வானுர்தி வகையில் திடீரெனப் பேரொலியுடன் நிலத்தில் வலிந்து இறங்கு.
crasis
n. தாதுக் கலவை, உடலமைப்பின் பல்வேறு தனிப்பொருள்களின் கலவை, உடல்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, (இலக்.) கிரேக்க மொழியில் இரு உயிர் இணைந்து நீளுதல் அல்லது இணையுயிராதல்.
crass
a. பருத்த, தடித்த, திண்ணிய, அடர்த்தியான, அறிவற்ற.
crassamentum
n. உறை குருதியின் அடர்பகுதி, உறைந்த குருதிக் கட்டி.