English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
crumbly
a. நொறுங்கத்தக்க, பொடியாகக்கூடிய.
crumby
a. துண்டுதுண்டான, மென்மையான.
crummy
n. முடங்கித் திருகிய கொம்புள்ள பசு.
crump
n. வலிமை வாய்ந்த அடி, கடு வீழ்ச்சி, (வி.) (பே-வ.) மரப்பந்தாட்டத்தில் பந்தினை ஓங்கி அடி.
crumpet
n. மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை, ஊத்தப்ப வகை.
crumple
v. மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு.
crunch
n. பல்லரைப்பொலி, மெல்லுதல், பல்லரைப்பு, (வி.) ஓசைபட மெல்லு, பல்லாலரை, மிதித்துத் துவை, சரளை மீது நெரித்து நட, கசக்கு.
crupper
n. சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார், குதிரையின் பின்புறப் பகுதி.
crural
a. கால்சார்ந்த, கால் போன்ற.
crusade
n. சிலுவைப் போர், கிறித்தவ சமயப்போர், துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று, அறப்போர், பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம்.
crusader
n. சிலுவைப்போர் வீரர், அறப்போர் வீரர், உயர் குறிக்கோளுக்காகப் போராடுபவர்.
crusado
n. (போர்ச்.) சிலுவைக் குறியுள்ள போர்ச்சுக்கீசிய நாணய வகை.
cruse
n. மட்கலம், குவளை, சாடி.
crush
n. கசக்குதல், நெருக்குதல், பிழிதல், பிழிவு, சாறு, பழச்சாறு, பொருள்களின் செறிவு, ஆட்கூட்ட நெருக்கடி, கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு, (வி.) நொறுக்கு, கசக்கு, நெருக்கு, நெரி, பிழி, அடக்கு, கீழ்ப்படுத்து, துன்பப்படுத்து, அழி.
crush-barrier
n. கூட்டத் தடை வேலி, கூட்ட நெருக்கடியைத் தடுக்கும் அமைப்பு.
crush-hat
n. இசைநாடகத் தொப்பி வகை.
crush-room
n. கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை.
crusher
a. நசுக்குபவர், பிழிபவர், நசுக்குவது, பிழிவது, அடக்குபவர்.
crust
n. மேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள்.