English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
capriole
n. துள்ளல், குதிப்பு, (வி.) துள்ளு, குதி, இடக்குப் பண்ணு.
caproic
a. வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த, கொழுநெய் வகையார்ந்த.
caprylate
n. கொழுங்கார வகை, கொழுநெய்காடியின் கார வகை.
caps, n. Capitals
(பெரிய எழுத்துக்கள்) என்பதன் சுருக்கக் குறியீடு.
capsicum
n. சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம், பதம் செய்த சிவப்பு மிளகுக்காய்.
capsize
v. மறிந்து வீழ், குடைமறி, கவிழ்வி, குடைமறியச் செய்.
capstan
n. கப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி, பாயுயர்த்தும் கம்பிப்பொறி, பாரந்தூக்கி.
capsular, capsulary
பொதியுறைக்குரிய, உறைவடிவான, உறைபொதி தாங்கிய.
capsulate
a. உறையில் பொதிவுற்ற, பொதியுறை உடைய, உறையாய் உருவான.
capsule
n. (மரு.) மருத்துறை, மாத்திரையின் பொதியுறை, புட்டியின் உலோக அடைப்பு, (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை, நெற்று, பாசிச்சதலுறை, (உயி.) மென்தோல் பொதியுறை, ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்.
capsuliform
a. உறைபொதி வடிவான, நெற்றுருவான.
captain
n. தலைவர், தலைமைப்பணியாளர், பணி முதல்வர், கப்பல் மிகான், கப்பற்குழு முதல்வர், கடற்படைத் தளபதி, படைக்கப்பல் முதல்வர், குதிரைப்படை முகவர், படைத்துறைத் தலைவர், படைப்பிரிவுத் தளபதி, சுரங்க மேலாளர், ஆட்டக்குழு முதல்வர், பள்ளிமாணவர் தலைவர், இயக்குநர், தலைமைத்திறலாளர், தேர்ந்த வல்லுநர், (வி.) தலைமை தாங்கி நடத்து, இயக்கு.
captaincy
n. தளபதிப் பதவி, மீகான் நிலை, தலைமை, தளபதி அமர்வாணைண நிலை.
captaingeneral
n. படைப் பெருமுதல்வர்.
captainship
n. மீகான் பதவி, தளபதி நிலை, தலைமைத்திறம், இயக்குந் திறலாண்மை, தலைமை.
captation
n. உணர்ச்சிமூலம் கவரவல்ல வாதம், கவர்ச்சி நாட்டமுடைய பேச்சு முறை.
caption
n. கைப்பற்றுதல், ஈர்த்து நிறுத்துதல், சட்டப்படியான பற்றாணை, கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம், தலைப்பு, முனைப்பான முகப்புரை, முகப்புப்படம்.
captious
a. குறைகாணும் இயல்புடைய, சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய, விதண்டையான, தவறான போக்குடைய, பிழைபாடான.
captivation
n. கவனம் கவர்தல், கவர்ச்சி.