English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
characteristically
adv. குறிப்பிட்ட வகையில், தனித்தன்மையாக, சிறப்பியல்பாக.
characterization
n. பண்புரு வருணனை, பண்பேற்றக் குறிப்பீடு.
characterize
v. பண்பு விரித்துரை, தனிச்சிறப்புக்களால் விளக்கு, வருணி, தனித்தன்மையளி, தனிச்சிறப்பாய் அமை.
characterless
a. குணச்சிறப்பற்ற, தனிச் சிறப்புப் பண்பிலாத, சான்று பெறாத.
charade
n. சொல் அல்லது அதன் பகுதிபற்றிய குறிப்பு அல்லது சாடையைக்கொண்டு சொல்லை ஊகித்துக் காண முயலும் விளையாட்டு.
charcoal
n. கரி, கட்டைக் கரி, தீய்ந்து கரியான மரக்கட்டை.
charge
n. தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.
charge daffaires
n. (பிர.) துணைநிலைத் தூதுவர், செயல் தூதுவர், தற்காலிகப் பொறுப்பாட்சியாளர்.
charge-hand, charge-man
n. பணியாட்டுக்குழுத் தலைவன்.
charge-sheet
n. குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
chargeable
a. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
charger
n. தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை.
charges
n. pl. செலவுகள், சிறு செலவினத் தொகுதி.
chargin
n. கடும் ஏமாற்றம், ஆரஞர்த் தன்னொடுக்கம், மன உராய்வுத் துன்பம், உள அரிப்பு, (வி.) ஏமாற்றமடைவி, மன எரிச்சலுட்டு.
charily
adv. மட்டற்ற எச்சரிக்கையுடன், தயக்கத்துடன், சிறிது சிறிதாக, கஞ்சத்தனமாக.
chariness
n. கஞ்சத்தனம், மட்டவற்ற தயக்கம்.
chariot
n. தேர், இரதம், நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி, போர்ச்சகடம், வெற்றியூர்தி, (வி.) தேரில் ஏற்றிச் செல், இரதத்தில் ஏறிச்செல்.
charioteer
n. தேர்ப்பாகன், இரதமோட்டி, (வி.) தேரோட்டு, தேரேறிச்செல்.
charitable
a. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற.