English Word (ஆங்கில வார்த்தை)
									Tamil Word (தமிழ் வார்த்தை)
									
								 
								
								dogshores
								n. pl. கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
								
							 
								dogsleep
								n. மெல்லுறக்கம்,
								
							 
								Dogstar
								n. அழல்மீன், வானில் பெருநாய் மீன் மண்டலம், சிறுநாய் மீன் மண்டலம்.
								
							 
								dogtooth
								n. சதுர மோட்டுருவ நுட்பவேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைவகை.
								
							 
								dogtrot
								n. அமைந்த ஒடட நடை.
								
							 
								dogwood
								n. இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
								
							 
								doily
								n. உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
								
							 
								doing
								n. செய்தல், செயல்முறைப்படுத்தல், (பெயரடை) செயல் செய்கிற சுறுசுறுப்பான.
								
							 
								doings
								n.pl. செயல்கள், நிகழ்ச்சிகள், நேர்ச்சிகள்.
								
							 
								doit
								n. டச்சு நாட்டு சிறுநாணயம், மிகச்சிறுதொகை, பயனற்ற பொருள், அற்பப்பொருள்.
								
							 
								dolce far niente
								n. மகிழ்ச்சியான சோம்பேறித்தனம், இன்ப ஓய்வு.
								
							 
								doldrums
								n. pl. எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும்  பகுதிகள், காற்றுத்தேக்கம், வெப்பமண்டலப் பகுதி, அமைதி, எழுச்சியற்றநிலை.
								
							 
								dole
								-1 n. ஊழ், ஊழ்வகுப்பு, பங்கு. அறமுறைபங்கீடு, அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை., கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு, துயருதவி, இடருதவி, வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம், சிறுபகுதி, அற்ப அளவு, (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
								
							 
								doleful
								a. துயரம் மிகுந்த, முகவாட்டமுள்ள, மகிழ்ச்சியற்ற.
								
							 
								dolerite
								n. சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை.
								
							 
								dolesome
								n. துயரமுள்ள, துயர்குறித்த.
								
							 
								dolichocephalic, dolichocephalous
								a. நீண்ட தலையோட்டையுடைய.
								
							 
								Dolichos
								n. கொள்ளு மொச்சை அவரை முதலிய செடியின் வகை.
								
							 
								doll
								n. பொம்மை, கைப்பாவை, ஆலி, மனித உருவப் பொம்மை, அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி, ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி, மட்டுமீறி ஒப்பனைசெய்.