English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
drizzle
n. மழைத்தூறல், நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல், (வினை) சிறு தூறலாகப் பெய்.
drogher
n. கரையோரமாகச் செல்லும் கப்பல், மெதுவாய்ச் செல்லும் கன எடை மரக்கலம்.
drogue
n. திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை, கடல் நங்கூரம், படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
droit
n. சட்டப்படியான உரிமை, சட்டப்படியான உரிமைப் பொருள், கப்பற்படைத் தளபதிக்குரிய சட்டப்படியான மேல்வருவாய் இனம்.
droll
n. வேழம்பர், கோமாளி, (பெயரடை) குறும்பான, நகைப்பூட்டுகிற, அரைக்கிறுக்கான, இயல்முரணிய, வியப்பூட்டுகிற, (வினை) கேலி செய், கோமாளித்தனம் புரி.
drollery
n. கோமாளித்தனம், களியாட்டமிக்க கலைப்படைப்பு, இழிதிற நகைச்சுவை., கேலிக்கூத்தான காட்சி, பொம்மலாட்டம்.
drome
n. வானுர்தி நிலையம்.
dromedary
n. ஏறிச்செல்லுவதற்கேற்ற நிறை இனமரபுப் பயிற்சியுடைய அராபிய ஒற்ற திமில் ஒட்டகம்.
dromond
n. இடைக்காலப் போர்கப்பல், வாணிகக்கப்பல்.
drone
n. வேலைசெய்யாத ஆண் தேனீ, சோம்பேறித்தேனீ, சோம்பேறி, பிறர் உழைப்பில் வாழ்பவர், பொம்மென்ற இரைச்சல் ஒலி, சலிப்புத்தரும் பேச்சு, சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர், தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை, (வினை) தேனீப்போல இரைச்சலிடு, இரைந்து முரலு, சலிப்புத்தோன்றும்படி பேசு.
droop
n. குனிவு, கீழ்நோக்கிய சாய்வு, தளர்வு, ஊக்கக்கேடு, குரல் கம்மிய நிலை, தொனியிறக்கம், (வினை) குனி, வாடி வளை, தொங்கு, சாய்வுறு, தொங்கவிடு, கீழ்நோக்கிப் பார், கதிரவன் வகையில் அடிவானில் ஆழ், சோர்வடை, ஊக்கமிழ, நலிவுறு.
drop
n. துளி, நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு, சிறிதளவு நீர், சிறிதளவு நீரியலான மருந்து, சிறிதளவு, வீழ்துளியுருவப் பொருள், தொங்கல் மணி, பதக்கம், தொங்கட்டம், மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை, வீழ்ச்சி, செங்குத்தான பள்ளம்,. மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு, விடுதிரை, திரை வீழ்ச்சி,தூக்குமரப் பொறித்தட்டு, பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை, வீழ்ச்சியளவெல்லை, கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு, அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி, சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம், விலையிறக்கம், வெப்பதட்பநிலை வீழ்ச்சி, கடுந்தேறரல் சிறுகல அளவு, (வினை) துளிதுளியாக வடியவிடு, துளி சிதறவிடு, திவலை சிதறி உலர்வுறு, சொட்டுச்சொட்டாக விழு, திடுமெனக் கீழே விழு, செங்குத்தாக விழு, வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு, தாழ்த்து, கிடத்து, கைவிடு, துற, கூறாதுவிடு, குறியாமல் விட்டுவிடு, பெற்றுவிடு, பிறப்பி, தற்செயலாக வந்துசேர், தற்செயலாக வாய்விட்டுக்கூறு, வாய்தவறி வெளியிடப்பெறு, இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு, வழக்கத்துக்கு ஆட்படு, குறைவுற., அளவில் குறை., குரல்தாழ்த்து குரல் தணிவுறு.
drop-curtain
n. நாடக மேடையில் காட்சிகளுக்கிடையே விடப்படும் திரை.
drop-forging
n. வார்ப்புக்குழியில் உருகிய நிலையில் உலோகத்தை ஊற்றி அடித்திறுக்கி உருவாக்கும் வார்ப்பட முறை.
drop-hammer
n. காய்ச்சியடித்து வார்ப்படம் உருவாக்கும் பொறி.
dropping
n. கீழே போடப்படுவது.
drops
n. pl. கீழே விழுந்த பொருள்கள், துளியாக விழுந்த பொருள், மெழுகுதிரிகளினின்றும் வழிந்த மெழுகு, விலங்குகளின் சாணம், பறவைகளின் எச்சம்.
dropsy
n. (மரு) நீர்க்கோவை, மகோதரம், உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
droshky. Drosky
n. ருசிய நாட்டுக்குரிய தாழ்வான நான்கு சக்கர வண்டி வகை, செர்மனி நாட்டின் நான்கு சக்கர வாடகை வண்டி.