English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
willow
n. காற்றாடி வகை, மரம், செடிவகை மரவகைக் கட்டை, மரவகையாலான பந்தாட்ட மட்டை, பஞ்சு வெட்டும் பொறி, மரவகை மலர், துயர்க்குறிச் சின்னம், மரவகைத்தழைப் பின்னலோவிய அணி, (வினை.) பஞ்சுவெட்டுப் பொறியால் பஞ்சு வெட்டி மென்மையாக்கு.
willow-herb
n. இளங் கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை.
willow-pattern
n. கலங்களில் மரவகைத் தழை ஒப்பனைப் பின்னணியுடைய சீனக் கலைப்பாணி.
willowing-machine, willow-machine
n. பஞ்சு வெட்டுப்பொறி.
willowy
a. காற்றாடியின மரவகைகள் மிகுந்துள்ள, நொசிவும் நொய்ம்மையும் வாய்ந்த.
willy
n. பஞ்சு கழுவும் இயந்திரம்.
willynilly
adv. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக.
wilnd-up
n. முடிவு, முடிவுற்ற நிலை, இறுதிக்கட்டம்.
wilt
-1 v. வதக்கு, வதங்கு, உணங்கு, உணக்கு.
Wilton, Wilton carpet
n. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை.
wily
a. சூதுவாது நிரம்பிய, குறும்புச் சூழ்ச்சியுடைய.
Wimbledon
n. இங்கிலாந்தின் விம்பிள்டணில் நடக்கும் வீரமுதன்மைப் பந்தயப் போட்டிக்குரிய புல்வெளி வரிப்பந்தாட்டக் களம்.
wimple
n. முகமூடாக்கு, திரைவு, திருகு சுருள்வு, சுற்றுத் திருப்பம், அதிர்வலை, (வினை.) முகமூடாக்கிட்டுக்கொள், திரைமூடாக்கினால் போர்த்து, திரையிட்டு மறைத்துவை, திரைவுமடிப்புக்களாக அமைவி, மடிப்புக்களாக விழு, நீரோடை வகையில் வளைந்து நௌிந்து செல், சுற்றிச் சுற்றி வளைந்து செல், அதிர்வலைவுறு.
win
n. (பே-வ) கெலிப்பு, வெற்றி, (வினை.) கெலிப்புறு, வெற்றிபெறு, போராடிப் பெறு, போட்டியிட்டு அடை, பந்தயப் போட்டியிடையே முயன்று கைக்கொள், பந்தயப் பொருளாகப் பெறு, பரிசாகப் பெறு, வெற்றி உடைமையாகக் கைக்கொள்ளு, ஈட்டிப்பெறு, பதவி எய்தப்பெறு, மதிக்கப்பெறு, அரிது முயன்று சென்றடையப் பெறு, செல், வழியே முன்னேறு, இணக்குவித்துத் தன்வயமாக்கு, தன்பக்கஞ்சாய்வுறுவி, தூண்டிச் செயலாற்றுவி, இணக்குவித்து ஆதரவு பெறு, வரவர மேம்பாடுடு, வெடிவைத்துச் சுரங்கப் பொருள் எடு, சுரங்கக்கால் உருவாக்கி அமைவி, வரவர மிகுதியான கவனஞ் செலுத்தப்பெறு.
wince
n. உதை, உதைப்பு, வேதனைத் துடிப்பதிர்வு, பதைபதைப்பதிர்வு, (வினை.) குலைவுற்றுப் பின்வாங்கு, கண்ணிமை வெட்டுதலுறு, தசைச்சுரிப்புறு, வெட்டிப் பின்னிடைவுறு, அஞ்சிப் பின்னிடைவுறு.
wincey
n. உட்சட்டைக்குப் பயன்படுத்தங் கம்பளிப் பருத்திக் கலவைத்துகில்.
winceyette
n. இருபுற இழைமடி மென்துகில் வகை.
winch
n. திருகுவிட்டம், இயந்திர ஊடச்சின் செந்திரிபுக்கோட்டம், உருளைத் திருகுபிடிக் காம்பு, திருகு உருளை ஏற்றப் பொறி.
Winchester(1), Winchester quart
n. அரைகாலன் புட்டி அளவு.