English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wing-commander
n. விமானச்சிறகத் தலைவர்.
wing-footed
a. (செய்.) விரைவான.
wing-sheath
n. பூச்சியின இறக்கைச் செதிளுறை.
wing-spread
n. சிறகுப்பரப்பளவு, விமான இறக்கைகளின் பரப்பகல அளவு.
wing-stroke
n. சிறகடி, பறத்தலில் இறக்கைகளின் ஒரு தடவை இயக்கம்.
wingcovert
n. இறகு அடிப்பாயல், பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல்.
winged
a. சிறகுகள் அமைந்துள்ள, விதை வகையில் சிறகல்லியினையுடைய, தண்டு வகையில் இலைக்காம்படி இணைவுற்ற, கனி வகையில் தட்டையான அடி இணைப்புடைய, சிறகில் அடிபட்ட, விரைவான, விழுமிய.
wingless
a. சிறகுகள் இல்லாத.
winglet
n. சிறு சிறகு, போலிச் சிறகு.
wingman
n. விமான அணித் துணைக்காவல் விமானம், விமான அணித் துணைக்காவல் விமான வலவர்.
wings
n. pl. விமானப்படை வலவரின் பொறிப்புச் சின்னம், கப்பலின் பாய்கள்.
wink
n. இமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
winkle
n. உணவாகப் பயன்படும் கடல்நத்தை வகை.
winning
a. வெற்றியை உறுதி செய்கிற, வெற்றி பெறுகிற, வெற்றிச் செயல் சார்ந்த, வெற்றிச் செயலுக்குரிய, கவர்ச்சியான, இனிமையூட்டுகிற, தன் சார்பில் சாய்வூட்டத்தக்க.
winning-post
n. குதிரைப்பந்தய வெளியின் பந்தய இலக்கு.
winnings
n. pl. கெலித்த மதிப்பு, கெலிப்பெண் தொகுதி.
winnow
n. முறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌ்ளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய்.
winsome
a. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற.
winter
n. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி.
winter-green
n. பசுமை மாறாச் செடியினம்.