Word |
English & Tamil Meaning |
|---|---|
| நமச்சிவாயமூர்த்தி | namaccivāya-mūrtti, . The founder and first head of the Tiruvāṭutuṟai mutt; திருவாவடுதுறையாதீனத்தை ஸ்தாபித்த முதற்குரு. தென்னாவடுதுறைக் கண்ணிருந்து மதிதரு நமச்சிவாயன் வளர்கமலங்கள் போ£ற்றி (பண்டாரசா. அம்பல. தச. 3). |
| நமசம் | namacam, n. perh. namya. Pliability; இணக்கம். (யாழ்.அக) |
| நமட்டுக்கடி - த்தல் | namaṭṭu-k-kaṭi, v. intr. <>நமுடு- +. See நமடுகடி-, Colloq. . |
| நமட்டுச்சிரங்கு | namaṭṭu-c-ciraṉku, n. <>நமுட்டு- +. See நமட்டுச்சொறி. . |
| நமட்டுச்சிரிப்பு | namaṭṭu-c-cirippu, n. <>id. +. Suppressed smile, in ridicule; பரிகாசப் புன்சிரிப்பு. Loc. |
| நமட்டுச்சொறி | namaṭṭu-c-coṟi, n. <>id.+. 1. Itch, scabies; சிரங்கு; 2. Papular eruption of the skin, of which violent and chronic itching is the chief symptom, prurigo; 3. Cutaneous disease with glistening imbricated scales affecting only the superficial layers of the skin, psoriasis; |
| நமட்டுவிஷமம் | namaṭṭu-viṣamam, n. <>id. +. Secret mischief; மறைவாகச்செய்யும் குறும்பு Loc. |
| நமடுகடி - த்தல் | namaṭu-kaṭi-, v. intr. <>நமுடு+. To bite the lips, as children; குழந்தைகள் உதட்டைக்கடித்தல். |
| நமத்தம் | namattam, n. Spikenard herb, See சடாமாஞ்சி (சங். அக.) |
| நமதன் | namataṉ. n. <>namata. Lord, God; ஆண்டவன். (யாழ்.அக) |
| நமபுரம் | nama-puram, n. <>நமன் +. Yama's city; எமனது நகரம். எதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறு நம்புருடோத்தமன் (திவ்.பெரியாழ்.4, 7, 4). |
| நமர் - த்தல் | namar, 11, v. intr. <>T. nemmuri. See நம-, (W.) . |
| நமர் | namar, n. <>நம். 1. Our relations; நம்முடைய சுற்றத்தார். நமர் விட்ட வேறு (பு. வெ. ஒழிபு. 5). 2. Persons of our party; |
| நமரி | namari, n. A kind of long trumpet நீண்ட எக்காளவகை. Tj. |
| நமரைவாழை | namarai-vāḻai, . Green banana, Musa paradisiaca-troglody tarum; வாழைவகை. (L.) |
| நமலு - தல் | namalu-, 3 vr. tr. <>namas. To reverence, worship, bow prostrate; வணங்குதல். வானவர் வானவர் கோனொடு நமன்றெழுந் திருவேங்கடம் (திவ்.திருவாய்.3, 3, 7) |
| நமவாரிதி | namavāriti, n. Thigh; தொடை. (சங்.அக.) |
| நமற்கரி - த்தல் | namaṟkari-, 11 v. tr. <>namas-kr. See நமஸ்கரி-. (W.) நமச்கரி |
| நமற்காரம் | namaṟkāram, n. <>namaskāra. 1. See நமஸ்காரம். (W.) . 2. (šaiva.) See நமற்காராதனம். (தத்துவப். 107) . (W.) |
| நமற்காராதனம் | namaṟkārātaṉam, n. <>id.+. (šaiva.) A posture in which both the hands are placed in the attitude of worship near the heart and the kness so bent as to make the soles of both feet touch each other; கையிரண்டும் இதயத்திலேவைத்துத்தொழுது இரண்டுள்ளங்காலும்பொர முழந்தாள் மடித்திருக்கும் நிலை. (தத்துவப்.107, உரை.) |
| நமன் | namaṉ n. <>yama. Yama . See யமன். நாமார்க்குங் குடியல்லோ நமனை யஞ்சோம் (தேவா.1236, 1). |
| நமனமண்டபம் | namaṉa-maṇtapam, n. <>snapana +. See நபனமண்டபம். (S. I. I. v, 236.) . |
| நமஸ்கரி - த்தல் | namaskari-, 11 v. tr. <>namas-kr. To bow, salute, reverence, worship, make obeisance to, adore; வணங்குதல். |
| நமஸ்காரம் | namas-kāram, n. <>namaskāra. Reverential bow, worship, adoration by bowing or prostration; வணக்கம். |
| நமாஸ் | namās, n. <>U. namas. Prayer in a mosque முகம்மதியரின்தொழுகை Muham. |
| நமி | nami, n. <>nami. (Jaina.) An Arhat, one of twenty-four tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) |
| நமிடு | namitu, n. perh. நமுடு. 1. A kind of crane; நாரைவகை. நமிடு கரப்பான் வாதம் நாட்சோபை மாற்றும் (பதார்த்த. 898). 2. See நமுடு, (யாழ். அக.) |
| நமித்திரர் | na-mittirar, n. <>na+mitra. Enemies; பகைவர். நமித்திரர் நடுக்குறு நலங்கொண் மொய்ம்புடை (கம்பரா.திருவை. 91). |
| நமிநந்தியடிகணாயனார் | nami-nanti-y-aṭikaṇāyaṉār, . A canonized šaiva saint, one of 63 நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு) |
