Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணி 6 | pani, n. <>phaṇin. Cobra; நாகம். (பிங்.) |
| பணிக்கம் 1 | panikkam, n. cf. பணிக்கு. (W.) 1. Amendment, correction; திருத்தம் 2. Accuracy of design; neatness; elaboration in a work |
| பணிக்கம் 2 | panikkam, n. cf. படிக்கம். Spittoon; எச்சில் உமிழுங் கலம். Loc. |
| பணிக்களரி | paṇi-k-kaḷari, n. <>பணி3+. Workshop; தொழில் செய்யுமிடம். கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும் (புறாநா.95, உரை) |
| பணிக்கன் | paṇikkaṉ, n. <>பணி3. 1.Teacher; ஆசாரியன். (பிங்). 2. Fencing master, one who teaches the use of arms; 3. Director or manager of a play; instructor, as of actors; dancing master; 4. [M. paṇikkan.] Master builder; 5. Carpenter; 6. Mahout, elephant driver; 7. Headman of the barber caste; 8. Physician for snake-bite; 9. One who distils arrack; 10. A caste-title; 11. A labouring class; 12. A sub - division of the Paḷḷar caste; |
| பணிக்காயன் | paṇikkāyaṉ, n. cf. பணிக்காரன். Officer; உத்தியோகஸ்தன். பணிக்காயன் சொக்கலிங்கம்... தையலங்கி யொன்றெனக்குத் தந்தான் (விறலிவிடு.). |
| பணிக்காரன் | paṇi-k-kāraṉ, n. <> பணி3+. Servant வேலையாள். Loc |
| பணிக்கு | paṇikku, n. 1. See பணிக்கம்1, 2. பணிக்கான வேலை. . 2. Good health; good constitution; |
| பணிக்குசெலுத்து - தல் | paṇikku - celuttu -, v. intr. <> பணிக்கு+. To act as the superintendent of workmen ; வேலையாட்களின் வேலையைப் பராமரித்தல் பணிக்குசெலுத்துகிறவன். (W.) |
| பணிக்குசொல்(லு) - தல் | paṇikku - col-, v.intr. <>id. +. 1. To give direction, as in doing a work; வேலைசெய்யும் முறையைக் காட்டுதல். (W.) 2. To criticise; |
| பணிக்கை | paṇikkai, n. <>id. Trimming the hair about the face நேர்த்தியாய் முகமயிர் வெட்டுகை. (J.) |
| பணிக்கொட்டில் | paṇi-k-koṭṭil, n. <>பணி3+. Workshop, factory ; தொழிற்சாலை. அவர்கள் தங்கின பணிக்கொட்டிலிலே சென்று. (ஈடு, 9, 1, 2) |
| பணிக்கொட்டு | paṇi-k-koṭṭu, n. <>id. +. Beating of cutta-mattaḷam while decorating a deity with flowers கடவுளுக்குப் புஷ்பாலங்காரஞ் செய்யும்போது சுத்தமத்தளம் வாசிக்கை. Tj. |
| பணிகாரத்துத்தி | paṇikāra-t-tutti, n. See பணியாரத்துத்தி. (யாழ். அக.) . |
| பணிகாரம் | paṇikāram, n. See பணியாரம் (யாழ்.அக) . |
| பணிகொள்(ளு) - தல் | paṇi-kōl, v. tr. <>பணி3+. To accept as a servant ; தொண்டனாக ஏற்றுகொள்ளுதல். பாவியேனைப் பணிகொண்டாய் (திருவாச, 5, 54) |
| பணிகோள் | paṇi-kōḷ, n. <>id. +. Submission, homage வணக்கம். படிறிடை மிடைந்த பணிகோ ளீயா (பெருங். உஞ்சைக்.46, 150) |
| பணிச்சக்கரம் | paṇi-c-cakkaram, n. <>பணி6+. (Astrol.) Diagram in the form of a snake used in selecting an auspicious day for sowing a field ; வித்திடுதற்கு நாட்பார்க்க உதவும் பாம்புவடிவான ஒர் சோதிடசக்கரம். (யாழ்.அக.) |
| பணிச்சவன் | paṇiccavaṉ n. <>பணி3. See பணிசெய்வோன், 2. Madr. . |
| பணிசவன் | paṇicavaṉ, n. See பணிசெய்வோன். 2. Loc. . |
| பணிசாரகன் | paṇicārakaṉ, n. cf. paricāraka. Servant ; வேலையாள். (யாழ்.அக.) |
| பணிசிவன் | paṇicivaṉ n. See பணிசெய்வோன், 2. (பேரூர்ப்புராணம், பள்ளுப்.) . |
| பணிசெய்வோன் | paṇi-ceyvōṉ, n. <>பணி3+. 1.Servant; வேலைக்காரன். 2. A caste whose profession is to blow the long trumpet of conch at weddings and funerals; |
