Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலைக்கணிகை | vilai-k-kaṇikai n. <>விலை+. Harlot; வேசை. மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை (பரிபா. 20, 49). |
| விலைக்காமர் | vilai-k-kāmar n. <>id.+. Harlots; வேசையர். காமனார்புரம் விலைக்காமர் வீதியே (இரகு. நகரப். 8). |
| விலைக்காரன் | vilai-k-kāraṉ n. <>id.+ காரன்1. See விலைகாரன். (W.) . |
| விலைக்கிரயச்சீட்டு | vilaikkiraya-c-cīṭṭu n. <>விலைக்கிரயம்+. Deed of sale; கிரயபத்திரம் |
| விலைக்கிரயம் | vilai-k-kirayam n. <>விலை+. Sale-price; பெறுமானத் தொகை. (W.) |
| விலைகட்டு - தல் | vilai-kaṭṭu- v. intr. <>id.+. To set or fix a price; பெறுமானத் தொகையை நிச்சயப்படுத்துதல். (W.) |
| விலைகாரன் | vilai-kāraṉ n. <>id.+காரன்1¢. Purchaser; பெறுமானத் தொகையைக் கொடுத்துப் பண்டங்கொள்வோன். (யாழ். அக.) |
| விலைகுறி - த்தல் | vilai-kuṟi- v. intr. <>id.+. To estimate the price; விலைமதித்தல். |
| விலைகூவு - தல் | vilai-kūvu- v. tr. <>id.+. See விலைகூறு-, 2. . |
| விலைகூறு - தல் | vilai-kūṟu- v. tr. <>id.+. 1. To name the price; பண்டத்தின் விலையைச் சொல்லுதல். 2. To offer for sale publicly, by crying out; |
| விலைகொடுத்துயிர்காத்தல் | vilai-koṭut-tuyir-kāttal n. <>id.+ கொடு-+. Saving a life by payment of ransom, considered an act of charity; கொல்லப்படும் பிராணிகளைப் பணங்கொடுத்து உயிர் மீட்கும் அறச்செயல். (பிங்.) |
| விலைகொள்(ளு) - தல் | vilai-koḷ- v. <>id.+. tr. 1. To buy, purchase; விலைக்கு வாங்குதல். --intr. 2. To be costly or valuable; |
| விலைகோள் | vilai-kōḷ n. <>விலைகொள்-. 1. Worthiness; கிரயமதிப்புப் பெறுகை. 2. A characteristic quality of pearls; |
| விலைச்சரக்கு | vilai-c-carakku n. <>விலை+. Goods or articles for sale; விலைப்படுத்த வைத்திருக்கும் பண்டம். |
| விலைச்சேரி | vilai-c-cēri n. <>id.+. Bazaar, market; பலபண்டம் விற்குமிடம். பல்விலைவாணிகர் நல்விலைச்சேரி (பெருங். மகத. 3, 77). |
| விலைசவு - த்தல் | vilai-cavu- v. intr. <>id.+. See விலைசளை-. . |
| விலைசளை - த்தல் | vilai-caḷai- v. intr. <>id.+. To decrease or fall in price; விலைகுறைதல். |
| விலைசிராவணை | vilai-cirāvaṇai n. <>id.+ ஆவணம். See விலைத்தீட்டு. சங்கரதேவற்கு இறையிழித்துவிற்று விலைசிராவணை செய்துகொடுத்தோம். (S. I. I. iii, 105). . |
| விலைஞன் | vilaiaṉ n. <>id. 1. Seller; விற்பவன். மைந்நிண விலைஞர் (மணி. 28, 33). 2. Merchant; |
| விலைத்தண்டம் | vilai-t-taṇṭam n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (Insc.) |
| விலைத்தரம் | vilai-t-taram n. <>id.+தரம்1. Commuted value of paddy tax; நெல்வரியை ரொக்கவரியாக மாற்றிவந்த பணவரி. Nā. |
| விலைத்தீட்டு | vilai-t-tīṭṭu n. <>id.+தீட்டு2. Sale-deed; விலையோலை. சாத்தனது விலைத்தீட்டு (தொல். சொல். 81, உரை). |
| விலைத்துண்டு | vilai-t-tuṇṭu n. <>id.+. 1. A charge paid out of the kuṭivāram by cultivators to the mēlvāratār or to the government on account of the difference between the price at which the cultivators had sold their grain and the estimated retail prices at the place of sale; கிராமங்களிற் சில்லறையாக விற்கும் நெல்விலைக்கும் மதிப்புவிலைக்குமுள்ள வித்தியாசத்தை ஈடுசெய்வதற்காகக் குடிவாரத்திலிருந்து விவசாயி மேல்வாரதாருக்குச் செலுத்தும் அதிக வரி. (R. T.) 2. Loss due to the difference between the sale price and the cost price; |
| விலைத்தூக்கம் | vilai-t-tūkkam n. <>id.+ தூக்கம்2. See விலையேற்றம். நல்லெண்ணெய் விலைத்தூக்கமாக இருக்கிறது. . |
| விலைதீர் - தல் | vilai-tīr- v. intr. <>id.+. To be settled, as price; கிரயம் நிச்சயமாதல். (யாழ். அக.) |
| விலைதீர் - த்தல் | vilai-tīr- v. tr. <>id.+. To settle the price; கிரயம் நிச்சயித்தல். (W.) |
| விலைநலப்பெண்டிர் | vilai-nala-p-peṇṭir n. <>id.+நலம்+. Harlots; பரத்தையர். விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற (புறநா. 365). |
