English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Candle-fish
n. உலர்த்தி மெழுகுதிரி போன்று பயன்பட வல்ல நெய்யார்ந்த வட பசிபிக் மாக்கடலின் மீன்வகை.
Candle-holder
n. பணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர், மறைமுக உடந்தையாளர்.
Candle-light
n. மெழுகு விளக்கொளி, விளக்கொளி, மெழுகுதிரிக்கட்டின் ஔதவிளக்கம், விளக்கு ஔத நேரம்.
Candle-lighter
n. விளக்கு ஏற்றுபவர், விளக்கேற்றப் பயன்படும் பொருள்.
Candlemas
n. கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள், பிப்ரவரி 2-ஆம் நாள்.
Candle-nut
n. பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை.
Candle-power
n. மெழுகு விளக்கொளி, ஔத அலகுக் கூறு.
Candle-snuffer
n. மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி, நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள்.
Candlestick
n. மெழுகுதிரி நிலைச்சட்டம்.
Candle-tree
n. மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Candle-waster
n. இரவு நெடுநேரங் கடந்துங் கற்பவர்.
Candle-wood
n. நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
Candock
n. மஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை, மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை.
Candour
n. ஒருபாற் கோடாமை, நடுவுநிலைமை, வாய்மை, நேர்மை, கரவின்மை, படிறின்மை.
Candy
-1 n. கற்கண்டு, (வி.) சர்க்கரை படிவி, சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து, சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு, மணியுருவாகு.
Candy
-2 n. கண்டி, பாரம், இருபது மடங்கு கொண்ட எடை.
Candytuft
n. (தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை.
Cane
n. பிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி.
Cane-apple
n. சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை, சிவப்புப் பழவகை.
Cane-bottomed
a. பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய.