English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Internationalist
n. அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர், அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர்.
Internationalize
v. அனைத்துநாட்டுரிமையாக்கு, வெவ்வேறு நாடுகளின் இணைந்த பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வா.
Internecine
a. ஒருவரை ஒருவர் அழிக்கிற, ஒன்றைஒன்று கெடுக்கிற, உட்பகை சார்ந்த.
Internode
n. கணுவிடைப்பகுதி, இருகணுக்களுக்கு இடைப்பட்ட தண்டுப்பகுதி.
Internuncial
a. நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற.
Internuncio
n. போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர், தூதர் அமர்த்தப்படாத, காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர், (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர்.
Interoceanic
a. இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட, மாகடல்களை இணைக்கிற.
Interosculate
v. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை.
Interosseous
a. எலும்புகளுக்கிடையே உள்ள.
Interpage.
v. இடைப்பக்கங்களில் அச்சிடு, பக்கங்களிடையே செருகு.
Interparietal
a. மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள.
Interpellate
v. இடையினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Interpenetrate
v. முழுநிறைவாக ஊடுருவிச்செல், முழுமையாக ஊடுருவிப் பரவு, மாறிமாறி ஒன்றையொன்று ஊடுருவு.
Interplait
v. சேர்த்துமுடை, இணைத்துப்பின்னு.
Interplanetary
a. கோள்களுக்கிடைப்பட்ட.
Interplay
n. இடைவினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Interplead
v. மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
Interpol
n. குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு.
Interpolate
v. இடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.