English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pure
a. தூய, பரிசுத்தமான, கலப்பற்ற, நேர்வழிமரபான, கால்வழிக்கலப்பற்ற, துரைதீர்ந்த, பிறிதொன்றன் தொடர்பற்ற, கெடாத, வழுவாத, தீமை கலவாத, குற்றமற்ற, கரையற்ற, களங்கமில்லாத, மாசுமறுவற்ற, வாய்மை குன்றாத, பெண்மைநலங் கெடாத, ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற, இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற, நேரிசையான, உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த, சொல்லடி வகையில் உயிரீறான, மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத, இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Pure-blood, pure-blooded, pure-bred
a. இனக்கலப்பற்ற, தூய்மையான மரபுடைய.
Puree
n. காய்கறி வடிசாறு, இறைச்சிச் சூப்பி.
Purfle
n. கரைக்கட்டு, ஆடைப்பூவேலை ஓரம், (வினை.) பூவேலை ஒரத்தால் அழகுபடுத்து, கட்டிய விளிம்புகளைச் சுருண்ட மலர்கள் அல்லது இலைகள் போன்ற வேலைப்பாட்டால் ஒப்பனைசெய்.
Purfling
n. வில்யாழ் வகையின் விளிம்புகளைச் சுற்றியுள்ள ஒப்பனை வேலைப்பாடு.
Purgation
n. துப்புரவாக்கல், மலக்கழிப்பு, குடல் தூய்மைப்பாடு, மலநீக்கம், ஆன்மாவின் வினையுலகத் தூய்மைப்பாடு, (வர.) கடுஞ்சோதனைகள் மூலமான குற்றச்சாட்டுத் தீர்வு, (வர.) சூளுறவு மூலமான குற்ற ஐயுறவுத்தீர்வு.
Purgative
n. பேதிமருந்து, குடல் இளக்கமருந்து, (பெ.) குடல் இளக்குகறி, தூய்மைப்படுத்துகிற.
Purgatorial, purgatorian
a. கழுவாய்நிலை சார்ந்த, ஆன்மா திருத்தமடையும் இடஞ் சார்ந்த.
Purgatory
n. கழுவாய் நிலை, வழுநீங்கிடம், ஆன்மா திருத்தமடையும் இடம், ரோமன் கத்தோலிக்க வழக்கில் மாளவுக்குப்பின் திருவருட்பேற்றிற்குரியவர் பாவம் போக்கப்படும் இடம், (பெ.) பாவங்களைப் போக்குகிற, தூய்மைப்படுத்துகிற.
Purge
n. துப்புரவாக்கல், மலக்கழிப்பு, கழிப்புக்குறைப்பு, படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல், (வினை.) பேதியாக்கு, குடலைச் சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, மாசகற்று, ஆன்மமலம் நீக்கு, உள்ளம் துப்புரவாக்கு, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி, குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌதவி, குற்றமற்றவன் என்று எண்பி, (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு, அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Purification
n. தூய்மைப்பாடு, வாலாமை நீக்கம்.
Purificator
n. திருவுணா வழிபாட்டுத் துப்புரவுத் துணி.
Purify
v. தூய்மையாக்கு, சுத்தஞ்செய், சடங்குமுறைப்படி புனிதப்படுத்து, அயற்பொருள்களை அகற்றித் துப்புரவாக்கு, புடமிடு, அழுக்ககற்று, பாவம் நீக்கு.
Purim
n. ஹமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா.
Purinose
a. வெண்துகளால் மூடப்பெற்ற, பனிபோர்த்த.
Purist
n. தனித்தூய்மைக் கோட்பாட்டினர்.
Puritan
-2 n. கடுந்தூய்மைக் கட்சியினர், சமயத்துறைக் கடுங்கண்டிப்பாளர், ஒழுக்கத்துறைக் கடுங்கண்டிப்பாளர், (பெ.) கடுஞ் சீர்திருத்தச் சமயவாதியைச் சார்ந்த, ஒழுக்கத்திலுஞ் சமயத்திலும் கடுங்கண்டிப்பான.
Puritan
-1 n. (வர.) கரஞ்சீர்திருத்தச் சமயவாதி, பிரிட்டனில் எலிசபெத் அரசிகாலச் சீர்திருத்தம் அரைகுறையானது என்று கருதிய புரோட்டஸ்டாண்டு சமயத்தவர்.