English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Self-reliant
a. தன்நிற நம்பிக்கையுடைய, தற்சார்புணர்ச்சி வாய்ந்த.
Self-relying
a. தற்சார்பமைவுடைய, தன்னையே தான் நம்பியிருக்கிற, தன் முயற்சியில் நம்பிக்கையுடைய.
Self-renunciation
n. தன்னலத் துறவு, தன்மறுப்பு ஆன்மத் தியாகம்.
Self-repression
n. தன்னொறுப்பு, இயல்பான உணர்ச்சிகளையும் இயக்கங்களையும் வளர்ச்சிகளையும் வலிந்தடக்கும் பாங்கு.
Self-reproach
n. தற்கடிவு, தற்கண்டனம், தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுதல்.
Self-reproachful
a. தற்கடிகிற, தன்னைத்தான் குறைகூறிக்கொள்ளுகிற.
Self-reproof
n. தற்கடிவு, உள்ளுறுத்தல்.
Self-reproving
a. தானே தன்னைக் கண்டிக்கிற, மனச்சான்று குத்திக்காட்டுகிற.
Self-repugnance
n. அக முரண்பாடு, தனக்குத்தானே முரண்படுக்கை.
Self-repugnant
a. அக முரண்பாடுடைய, தனக்குத்தான் முரணுகிற.
Self-respect
n. தன்மானம், சுயமரியாதை.
Self-restrained
a. தன்னடக்க ஆட்சியுடைய, தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய, தற்றடுப்பாட்சி வாய்ந்த, தற்புலனடக்கம் வாய்ந்த.
Self-restraint
n. தன்னடக்க ஆட்சி, தன்னுணர்ச்சிக் கட்டுப்பாடு, தற்புலனடக்கம்.
Self-revealing
a. தன் வௌதப்பாடுடைய, தன்னைத்தானே வௌதப்படுத்திக் காட்டுகிற, தானே தனக்கு விளக்கம் அளிக்கிற, இயல்விளக்கத்திறம் வாய்ந்த, தன்னை விளக்குகிற.
Self-revelation
n. தன் வௌதப்பாடு, தன்னை வௌதப்படுத்திக்காட்டுதல், தன்விளக்கம், கடவுளின் தன்னருள் வௌதப்பாடு, தன்னியல் விளக்கம், பிறிதின் துணையின்றித் தானே விளங்கிக் கொள்ளுந் திறம்.
Self-reverence
n. தற்போற்றரவு, தன் தகுதி மதிப்பு.
Self-reverent
a. தற்போற்றரவு வாய்ந்த.
Self-righteous
a. தன்னேர்மையுணர்வு வாய்ந்த, தன்னொழுக்க முனைப்புணர்வுடைய, தன் நோக்கில் தற்றுய்மையுள்ள, ஒழுக்க வீறாப்பு வாய்ந்த.
Self-righteousness
n. தன்னேர்மையுணர்வு, தன்னொழுக்கமுனைப்புணர்வு, ஒழுக்க வீறாப்பு.
Self-righting
a. தன்னிலை காப்புடைய, படகு வகையில் கவிழ்ந்தாலும் தானே தன்னைச் சரிசெய்து நிமிர்த்திக் கொள்ளத்தக்க அமைவுடைய.