English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wencher
n. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர்.
Wend
-1 n. ஸ்லவோனிய மக்கள் இனத்தவர்.
Wend
-2 v. மெல்ல நட, பின்பற்றிச் செல்.
Wended
v. 'வெண்ட் (2)' என்பதன் இறந்த காலம்.
Wennish, wenny
கழலை போன்ற.
Wensleydale
n. பாலடைக்கட்டி வகை, நீள்மயிர் ஆடு.
Went
v. கோ என்பதன் இறந்த காலம்.
Wentletrap
n. திருகு கிளிஞ்சில் தோடு வகை.
Wept
v. 'விப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Were
v. பீ என்பதன் இறந்த காலப் பன்மை வடிவம்.
Werewolf
n. பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன், இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர்.
Wert
v. பீ என்பதன் முற்கால முன்னிலை ஒருமை இறந்த கால வடிவம்.
Wesleyan
n. ஜான் வெஸ்ரலி (1ஹ்03-1ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர், (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
West
n. மேற்கு, படிஞாயிற்றுத் திசை, மேலையுலகு, ஐரோப்பிய நாகரிக உலகம், மேல்காற்று, (பெ.) மேற்குத்திசையில் அமைந்துள்ள, மேலைத் திசையில் வாழ்கிற, மேற்கு நோக்கிய, காற்று வகையில் மேற்கிருந்து வீசுகிற, (வினையடை.) மேற்கே, மேற்கு நோக்கி.
Wester
v. மேற்குத் திசைக்கு மாற்று,மேற்குத்திசை நாடித்திரும்பு.
Westering
n. மேற்குவாட்டத் திருப்பம், மேற்குச் சாய்வு, (பெ.) மேற்கு நோக்கி இயலுகிற, மேற்கு நோக்கிய.
Westerly
a. மேற்கு நோக்கிய, மேற்குத் திசை சார்ந்த.
Western
n. மேற்குநாட்டவர், (பெ.) மேற்கில் வாழ்கிற, மேற்கில் அமைந்துள்ள, மேற்கிலிருந்து வருகிற.
Westernism
n. மேல்நாட்டு நாகரிகப்பாங்கு.