“நீ எனது சுக நித்திரையைப் பற்றி விசாரிக்கிறாய் கவி. உண்மையிலே இப்பொழுது நான் கிழவனாகி விட்டேன் என்று உணரத் தொடங்குகிறேன்.”
“அது எப்படி?”
“நிர்வாண சுந்தரிகளும் எனது காம உணர்ச்சியைத் தூண்ட முடியவில்லை.”
“அப்படியானால், அரசே! தாங்கள் ஒரு மகாயோகி!”
“யோகியிடம் பதினாயிரம் அழகிய யுவதிகள் என்ன செய்வார்கள்!”
“பங்கிட்டுக் கொடுத்து விடுங்கள் அரசே! ஏற்றுக் கொள்பவர்கள் ரொம்பப் பேர் இருப்பார்கள். கங்கைக் கரையிலே தண்ணீர் விட்டுப் பிராமணர்களுக்குத் தானம் செய்து விடுங்கள். ‘சர்வேஷாமேவதானானாம் பார்யாதானம் விஷேசியதே.”
“அதைத்தான் செய்ய வேண்டும். வைத்திய ராஜ் சக்கரபாணியின் ‘ஜீவரஸம்’ ஒன்றும் பலனளிக்கவில்லை. இப்பொழுது, உன்னுடைய கவிதை ரஸம் ஒன்றைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.”
“நிர்வாண சுந்தரிகளும், ஜீவரஸமும் பலனளிக்க முடியாதபோது, எனது காவிய ரஸம் என்ன செய்ய முடியும்? மேலும் அரசே! நீங்கள் அறுபது வயதையும் கடந்து விட்டீர்களே.”
“அறுபது வயது நடு வயது தானே கவி.”
“யாருக்கு? பதினாறாயிரம் பாலிகைகளோடு உறவு கொள்ளும் காளைக்கா?”
“உன்னைக் காசியில் காணவே முடியவில்லை. நான் கனோஜிலிருந்து வந்து இரண்டு மாதமாகிறது.”
“மகராஜ்! நான் சித்திரை நவராத்திரியில் பகவதி வித்யாவதியைத் தரிசிக்கப் போயிருந்தேன்.”
“என்னுடைய படகும் அதே பாதையில் தானே வந்தது, தெரிந்திருந்தால் உன்னையும் அழைத்து வந்திருப்பேன்.”
“அழைத்து வந்திருப்பீர்களா அல்லது அங்கேயே இறங்கிக் குமாரி
பூஜையில் மூழ்கியிருப்பீர்களா?”
“ஆனால், கவிஞ! நீ குமாரி பூஜைக்காக அங்கே செல்லவில்லையே!”
“நாங்கள் பகவதியை வணங்கும் சாக்தர்கள் மகராஜ்!”
“ஆனால், நீ சீதாராமனையும் வணங்குகிறாயே, உன்னைப்பார்த்தால்
