அதிகாரம் 26
2 சுறுசுறுப்புள்ள பெண் தன் கணவனை மகிழச் செய்கிறாள்@ தன் வாழ்நாளையும் சமாதானத்தில் கழிக்கிறாள்.
3 தெய்வ பயமுள்ள மனிதன் செய்த நற்செயல்களுக்கு வெகுமதியாக அவனுக்கு ஒரு நல்ல மனைவி நியமிக்கப்படுவாள்.
4 செல்வனானாலும் வறியவனானாலும், எப்போதும் அவன் இதயம் நற்குணமுள்ளதாயும், அவன் முகம் மகிழ்ச்சியுள்ளதாயும் இருக்கும்.
5 மூன்று காரியங்களைப் பற்றி என் இதயம் அஞ்சியது@ நான்காவதைப் பற்றியோ என் முகம் வெளுத்தது.
6 நகரத்தின் பகை, கலகக்காரருடைய கூட்டம்,
7 பொய்யான புறணி- இம் மூன்றும் சாவிலும் கொடியவை.
8 ஆனால், பொறாமையுள்ள பெண் மன வேதனையும் தொல்லையுமாய் இருப்பாள்.
9 பொறாமையுள்ள பெண்ணிடம், அனைவரிடமும் முறையிடும் தாற்றுக் கோல் போன்ற நாவு உண்டு.
10 கெட்ட குணமுள்ள பெண் எருதுகள் பூட்டின அசையும் நுகத்தடியைப் போல் இருக்கிறாள். அவளை அடக்குகிறவன் தேளைப் பிடிப்பவன் போல் ஆவான்.
11 மதுவினால் மயங்கின பெண் மிகுந்த கோபத்திற்கு ஆளாவாள். அவள் மீது உண்டான வெறுப்பும், அதனால் உண்டான வெட்கமும் மறைக்கப்படா.
12 கண் பார்வையாலும் கண் இமைகளினாலும் விபசாரி அறியப்படுகிறாள்.
13 அடக்கமற்ற உன் புதல்வியை வெகு கவனமாய்ப் பார்த்துக்கொள். ஏனென்றால், வாய்ப்பு கிட்டும் போது அவள் தவறுவாள்.
14 நாணமற்ற கண்கள் உடையவளைக் கவனி. அப்படிக் கவனிக்காவிடில், அவள் விபசாரி ஆவாள்.
15 ஏனென்றால், தாகமுள்ள வழிப்போக்கன் நீரூற்றைக் காணும் போதெல்லாம் எப்படி வாய் திறப்பானோ, தன் வாய்க்கு எட்டும் எந்த நீரையும் குடிப்பானோ, அவ்வண்ணமே அவள் எல்லா மரத்தடிகளிலும் உட்கார்ந்து தோல்வியடையுமட்டும் எல்லா அம்புக்கும் தூணியைத் திறப்பாள்.
16 நாணமுள்ள பெண்ணின் நற்குணம் அவள் கணவனை மகிழ்விக்கும்@ அவன் எலும்புகளுக்கும் வலுக்கொடுக்கும்.
17 அவளுடைய நன்னெறி கடவுளுடைய வரம்.
18 அறிவும் நாவடக்கமுமுள்ள பெண்ணின் அறிவுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.
19 புனிதமும் நாணமுமுள்ள பெண் நன்மையிலும் நன்மை.
20 எல்லா (பொன்) நிறையும், அடக்கமுமுள்ள ஆன்மாவுக்குச் சமமன்று.
21 நல்ல பெண்ணின் அழகு வானமண்டலங்களில் ஒளிரும் கதிரவனைப் போல், அவள் வீட்டின் அணிகலனாய் இருக்கும்.
22 தக்க பருவத்தில் முகத்தின் அழகு, கடவுள் ஆலயத்தில் ஒளிரும் விளக்கைப் போல் இருக்கின்றது.
23 பருவப் பெண்ணின் பாதங்கள் மேலுள்ள உறுதியான கால்கள், வெள்ளிப் பாதங்களின் மேல் பொருத்தப்பட்ட பொற்றூண்களைப் போல் இருக்கின்றன.
24 உறுதியான கல்லின் மேல் போடப்பட்ட அடிப்படையைப் போல, புண்ணியமுள்ள பெண்ணின் இதயத்தில் கடவுளுடைய கட்டளைகள் இருக்கின்றன.
25 இரண்டு காரியங்களைப் பற்றி என் இதயம் கலங்கினது@ மூன்றாவதைப் பற்றி எனக்குக் கோபம் மூண்டது.
26 (இரண்டு) வறுமையால் வருந்தும் போர்வீரன், புறக்கணிக்கப்படும் அறிவாளி.
27 (மூன்றாவது) நன்னெறியைத் தள்ளி விட்டுப் பாவ நெறிக்கு உட்படுகிறவனைக் கடவுள் வாளுக்கு இரையாக நியமித்தார்.
28 இருவித காரியங்கள் அரிதானவையும் ஆபத்துள்ளவையுமாக எனக்குத் தோன்றின. எவையென்றால்: வியாபாரி அநியாயத்தை அரிதாய் விலக்குவான்@ மதுபானம் விற்கிறவன் வாய்ப் பாவங்களுக்கு அரிதாய்த் தப்புவான்.