அதிகாரம் 35
2 கட்டளைகளைக் கவனிப்பதும், எல்லா அக்கிரமத்தினின்றும் அகல்வதும் பயனுள்ள பலியாகும்.
3 அநீதத்தை விட்டகன்று போவது பொறுத்தலை மன்றாடும் பலியாகவும், பாவங்களுக்கு மன்னிப்பாகவும் இருக்கின்றது.
4 மாவுக் காணிக்கை கொடுக்கிறவன் நன்றியறிந்த வணக்கம் செய்கின்றான். இரக்கம் காண்பிக்கிறவன் பலி ஒப்புக்கொடுக்கிறான்.
5 அக்கிரமத்தினின்று அகன்று போவது ஆண்டவருக்கு விருப்பமானது. அநீதத்தினின்று விலகுவது பாவ நிவாரணம்.
6 அப்பொழுது நீ ஆண்டவருடைய முன்னிலையில் வெறுங்கையனாய்க் காணப்பட மாட்டாய்.
7 இவைகளெல்லாம் கடவுள் கட்டளையைப் பற்றிச் செய்யப்படுகின்றன.
8 நீதிமானுடைய காணிக்கை பலிபீடத்தைச் செழிப்பிக்கின்றது@ உன்னத கடவுள் திருமுன் இனிய மணமாய் இருக்கின்றது.
9 நீதிமானுடைய பலி விருப்பமாய் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆண்டவர் அவனை மறந்துவிட மாட்டார்.
10 நல்ல மனத்தோடு கடவுளுக்கு வணக்கம் செலுத்து. உன் கைகளின் முதற் காணிக்கைகளைக் குறைக்காதே.
11 ஈகையிலெல்லாம் மகிழ்ந்த முகம் காண்பி@ உன் பத்திலொரு பாகங்களை மகிழ்ச்சியாய்க் காணிக்கை கொடு.
12 உன்னத கடவுள் கொடுத்திருப்பதற்குத் தக்க வண்ணம் நீயும் அவருக்குக் கொடு. நல்ல முகத்தோடு உன் கைகளில் உள்ளதைக் கொடு.
13 ஏனென்றால், ஆண்டவர் பதிலளிப்பவராய் இருக்கிறார்@ ஏழு மடங்கு உனக்குத் திரும்பக் கொடுப்பார்.
14 தகாத காணிக்கைகளை ஒப்புக்கொடுக்காதே. ஏனென்றால், அவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
15 அநீதப் பலியைக் கவனியாதே. ஏனென்றால், ஆண்டவர் நீதிபதியாய் இருக்கிறார்@ அவரிடம் மனித ஒருதலைச் சார்பு இல்லை.
16 அவர் வறியவனுக்கு விரோதமாய் எவனையும் ஒருதலைச் சார்பாய் ஏற்றுக்கொள்ள மாட்டார்@ துன்புறுத்தப் பட்டவனுடைய மன்றாட்டைக் கேட்பார்.
17 அனாதைப் பிள்ளையினுடைய வேண்டுதலைப் புறக்கணிக்க மாட்டார். பெருமூச்சு விட்டு முறையிடும் விதவையைத் தள்ளிவிட மாட்டார்.
18 விதவையின் கண்ணீர்கள் கன்னத்திற்கு இறங்குவதில்லையா? அவைகளைச் சிந்த வைப்பவனுக்கு அவள் அழுகுரல் கேட்பதில்லையா?
19 ஏனென்றால், அவை கன்னத்தினின்று வானம் வரைக்கும் ஏறுகின்றன. மன்றாட்டைக் கேட்கும் ஆண்டவர் அவைகளால் மகிழ்ச்சி அடைவதில்லை.
20 மகிழ்ச்சியோடு கடவுளை ஆராதிக்கிறவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். அவன் மன்றாட்டு மேகங்கள் வரையிலும் எட்டும்.
21 தன்னைத் தாழ்த்துகிறவனுடைய வேண்டுதல் மேகங்களை ஊடுருவிப் போகும். அது அங்குச் சேர்கிற வரையிலும் ஆறுதல் அடையாது@ உன்னத கடவுள் பார்க்கிறவரையிலும் திரும்பிப் போகாது.
22 ஆண்டவரும் தூரமாய்ப் போகமாட்டார்@ நீதிமான்களை ஆதரித்துத் தீர்ப்பிடுவார். வல்லமை மிக்கவர் அவர்கள் மீது பொறுமை கொள்ளார்@ ஆனால், அவர்கள் முதுகை ஒடிப்பார்.
23 அவர் அகந்தையுள்ளவர்களுடைய கூட்டத்தை ஒழிக்கிற வரைக்கும் அநீதரைப் பழிவாங்குவார்@ அக்கிரமிகளுடைய செங்கோல்களை ஒடித்து விடுவார்.
24 அவர் மனிதர்களுக்கு அவரவர் செயல்களுக்குத் தக்கபடியும், ஆதாமுடைய செய்கைகளுக்குத் தக்கபடியும், அவன் வீண் அகந்தைக்குத் தக்கபடியும் கைம்மாறு அளிக்கும் வரைக்கும்,
25 தம் மக்களுக்கு நீதித் தீர்ப்புச் செய்யும் வரைக்கும் பழிவாங்குவார்@ நீதிமான்களைத் தம் இரக்கத்தினால் மகிழ்விப்பார்.
26 கோடைக்காலத்தில், மழை மேகங்களைப் போல, துன்ப காலத்தில் கடவுளுடைய இரக்கம் விரும்பத் தக்கதாய் இருக்கின்றது.