Word |
English & Tamil Meaning |
---|---|
இடுமுள் | iṭu-muḷ n. <>id.+. Thorns thrown over the entrance to a field or garden to precent intruders; வேலியாக இடும் முள். (சீவக.774, உரை). |
இடுவந்தி | iṭu-vanti n. <>id.+prob. kimvadantī. Accusation of an innocent person; குற்றமில்லாதவர்மேற் குற்றத்தை யேற்றுகை. பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க (சிலப்.16, 120. உரை). |
இடுவல் | iṭuval n. <>id. Crevice, aperture; இடுக்கு. |
இடை 1 | iṭai n. [M. ida.] 1. Middle in space, midst, centre; நடு. (திவா.). 2. Middle in time; 3. Middle of the body, the waist; 4. Middle class people; 5. The herdsman caste; 6. (Gram.) Medial consonants of the Tamil alphabet. See இடையெழுத்து. அவ்வழி யுயிரிடைவரின் 7. (Gram.) Indeclinable particle, as one of the parts of speech. See இடைச்சொல். 8. Place, space; 9. Left side; 10. Way; 11. Connection; 12. Suitable time, opportunity, season; 13. Cause; 14. A measure of length, breadth, thickness; Sign of t he loc.; |
இடை 2 - தல் | iṭai- 4 v.intr. 1. To grow weary, as with long waiting; சோர்தல். (சீவக.446, உரை). 2. To be damped in spirits; 3. To retreat, fall back; 4. To make room, get out of the way; 5. To submit; |
இடை 3 | iṭai n. <>இடை-. 1. Trouble, difficulty; துன்பம். (திருக்கோ.368, உரை). 2. Gap, unfilled space; 3. Check, stoppage, protest, impediment; |
இடை 4 | iṭai n. <>idā. 1. A principal tubular organ of the human body; one of taca-nāṭi, q.v.; தசநாடியி லொன்று. (சிலப்.3, 26, உரை). 2. Earth; |
இடை 5 | iṭai n. corr. of எடை. 1. Weight; எடை. இடைதான் குறைந்தது மச்சமுங் காட்டுவ தில்லை யென்றால் (ஒருதுறைக்.185). Colloq. 2. A measure of weight = 100 palams; |
இடைக்கச்சு | iṭai-k-kaccu n. <>இடை1+. Waist-band such as a narrow cloth or sash tied about the waist. See அரைக்கச்சை. . |
இடைக்கச்சை | iṭai-k-kaccai n. <>id.+. See இடைக்கச்சு. . |
இடைக்கட்டு | iṭai-k-kaṭṭu n. <>id.+. 1. Girdle or belt; அரைக்கச்சு. 2. Front plate, an adornment of idols, so called from its being fastened in the middle; 3. Intermediate space between the entrance door and the second doorway in an Indian dwelling house; 4. The middle compartment of an Indian dwelling house; |
இடைக்கணம் | iṭai-k-kaṇam n. <>id.+. gaṇa. Group of medial consonants in Tamil, as a classified group distinct from vaṇ-kaṇam and meṇ-kaṇam; இடையினம். |
இடைக்கருவி | iṭai-k-karuvi n. <>id.+. An ancient musical instrument of percussion; a kind of drum producing a characteristic sound dist. fr. that of the மத்தளம் or உடுக்கை; சல்லியென்னுந் தோற்கருவி. (சிலப்.3, 27, உரை). |
இடைக்கலம் | iṭai-k-kalam n. <>idā+. Earthern vessel for cooking; மட்பாண்டம். இல்லுள்வில்லேற்றி இடைக்கலத் தெய்து விடல் (பழ.24). |
இடைக்காடர் | iṭai-k-kāṭar n. <>இடைக்காடு. A Tamil poet of iṭai-k-kāṭu who flourished during the Saṅgam age; சங்கதத்துச் சான்றோருள் ஒருவர் (திருவாலவா.20. 1). |
இடைக்காடனார் | iṭai-k-kāṭaṉār n. <>id. See இடைக்காடர். (அகநா). |
இடைக்காற்பீலி | iṭai-k-kāṟ-pīli n. <>இடை1+. A toe-ring worn on the toe next to the little toe usually by the women folk among the Paratava community; பரதவமகளிர் அணியும் கால்விரலணிவகை. |
இடைக்கிடப்பு | iṭai-k-kiṭappu n. <>id.+. (Gram.) Word or words used as complement to the predicate or subject in a sentence; இடைப்பிறவரல். (சீவக.2697, உரை). |