Word |
English & Tamil Meaning |
|---|---|
| ஏடணை | ēṭaṇai n. <>ēsanā. Ardent desire; ஆசை. ஏடணையு மேவலெழுவாயு முதனூலும் (சிவதரு. சிவஞானயோ. 112). |
| ஏடல் | ēṭal n. prob. எழு-. Meaning, intention, thought; கருத்து. (திவா.) |
| ஏடலகம் | ēṭalakam n. cf. yaṣṭi-madhukā. 1. Liquorice-plant. See அதிமதுரம். அதிமதுரம். (மூ. அ.) 2. Crab's-eye. See குன்றி. |
| ஏடன் | ēṭaṉ n. <>šēṣa. Slave; தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார் (திருவாச. 43, 4). |
| ஏடா | ēṭā int. <>id. An exclamation addressed familiarly to a friend or an inferior; தோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14, 12). |
| ஏடாகூடம் | ēṭākūṭam n. [T. ēdāgōdamu, M. ēdāhūdam.] Perverseness, contradiction, confusion; தாறுமாறு. காரியம் ஏடாகூடமாய்ப் போயிற்று. |
| ஏடி | ēṭi int. <>Fem. of ஏடா. An exclamation addressed familiarly to a woman friend or to a woman of lower status than one who addresses her; தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல். |
| ஏடு | ēṭu n. <>ஏடு-. [M. ēdu.] 1. Petal; பூவிதழ். (திவா.) 2. Flower; 3. Eyelid; 4. Strip of palmyra leaf for writing; 5. Book of palmyra leaves; 6. Leaf of a book; 7. Section of a plantain leaf cut near the base, for use as a plate; 8. Cream; 9. Body; 10. Greatness, excellence; 11. Fault, blemish; |
| ஏடுகோ - த்தல் | ēṭu-kō- v. intr. <>ஏடு+. To string together the leaves of a palmyra leaf-book; பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல். |
| ஏடுகோளாளன் | ēṭu-kōḷ-āḷaṉ n. <>id.+. Accountant; கணக்கன். ஏடுகோளாள ரெனையரென்றெண்ணி (பெருங். உஞ்சைக். 37, 153.) |
| ஏடுசேர் - த்தல் | ēṭu-cēr- v. intr. <>id. To make up a book of the strips of palmyra leaves; பனையோலைகளை ஏடுகளாகச்சீவிப் புத்தகமாக்குதல். |
| ஏடுதூக்கு - தல் | ēṭu-tūkku- v. intr. <>id.+. To take up and read a book of palmyra leaves, before one's teacher; ஆசிரியரிடம் ஏட்டை எடுத்துப் படித்தல். |
| ஏடுபடு - தல் | ēṭu-paṭu- v. intr. <>id.+. 1. To form, as cream; பாலில் ஆடையுண்டாதல். 2. To spread, as moss over the surface of water; |
| ஏடுவாரு - தல் | ēṭu-vāru- v. intr. <>id.+. To pare palmyra leaves into uniform strips for being made up into a book; புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல். |
| ஏடெழுது - தல் | ēṭeḻutu-l v. intr. <>id.+. எழுது-. 1. To write out the alphabet for a child on an auspicious day with appropriate ceremonies; அக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல். 2. To begin to copy a book for learning; to open an account; |
| ஏடை | ēṭai n. <>ēṣā. Ardent desire; eager longing; ஆசை. (சூடா.) |
| ஏண் | ēṇ n. <>எண்ணு-. [M. ēṇu.] 1. Boundary, limit; எல்லை. (திவ். திருவாய். 2, 8, 8, பன்னீ.) 2. Strength, energy; 3. Firmness, stability; 4. Greatness, excellence; 5. Haughty words; 6. Crookedness; |
| ஏண்கோண் | ēṇ-kōṇ n. Redupl. of கோண். Unevenness, crookedness, inconsistency; ஒழுங்கின்மை. ஏண்கோணான பேச்சு. (J.) |
| ஏண்டாப்பு | ēṇṭāppu n. <>ஏணாப்பு. Self-conceit, arrogance, pride; இறுமாப்பு. (J.) |
| ஏணம் 1 | ēṇam n. <>ஏண். [M. ēṇam.] Firmness, stability; நிலைபேறு. (பிங்.) |
| ஏணம் 2 | ēṇam n. <>ēṇa. Deer; மான். (பிங்.) |
| ஏணல் | ēṇal n. <>ஏணல்கோணல். Curvature; விளைவு. (J.) |
| ஏணல்கோணல் | ēṇal-kōṇal n. Redupl. of கோணல். Unevenness, irregularity, crookedness; ஒழுங்கின்மை. (W.) |
| ஏணாப்பு | ēṇāppu n. <>ஏண். Haughtiness; இறுமாப்பு. (யாழ். அக.) |
| ஏணி 1 | ēṇi n. <>எண்-. cf. šrēṇi. 1. Number; எண். ஏணிபோகிய கீழ்நிலைப்படலமும் (ஞானா. 54, 1). 2. Tier; 3. [K. M.Tu. ēṇi.] cf. niššrēṇī. Ladder; 4. Limit, boundary; 5. Country, territory; |
