English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anti-aircraft
a. விமான எதிர்ப்புக்குரிய.
Anti-alcoholist
n. வெறிய வெறுப்பாளர், மதுபான விரோதி, வெறிக்குடி வெறுப்பவர்.
Antiar
n. மலாய் நில நச்சுமரவகை, நச்சுப்பால், நச்சுப்பிசின்.
Antibilious
a. பித்தத்துக்கு எதிரான, பித்த மாற்றான.
Antibiosis
n. உடன்வாழ்வொவ்வாமை, இயல்பான இனப்பகைத்தொடர்பு, ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
Antibiotic
n. உயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
Antibody
n. (உட்.) நோய் எதிர்ப்பொருள், உயிரின் தற்காப்புப்பொருள், தீங்கு த அயற்பொருளுக்கெதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.
Antic
n. கோணங்கி உருவம், கூத்தாடித்தனம்.
Anticathjode
n. ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு, எதிர்மின் கதிர்களின் குவியம்.
Anticatholic
a. ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த, கத்தோலிக்க நெறியை எதிர்த்த, பொது நோக்கெதிர்த்த.
Anticholor
n. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Anti-chorus
n. எதிர் இசைக்குழு, இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு, எதிரிசைப்பாடல், இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு, அனுபல்லவி.
Antichrist
n. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
Antichristian
a. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
Antichristianism
n. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு.
Antichthon
n. பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம், நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antichthones
n.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர்.
Anticipant
n. எதிர்நோக்குபவர், (பெ.) எதிர்நோக்குகிற.
Anticipate
v. எதிர்பார், எதிர்நோக்கு, அவாவு, முன்கூட்டி நிகழ்த்து, முன்னதாகவே அமை, காலத்தை முற்படக்குறி, முற்படு, முன்நிகழ், முந்து, முந்திக்கொள், முந்துறக்குறி, அவசரப்படு, விரைவுபடுத்து, முன்னறி, முன்னரே உறுதிக்கொள், முன்னேற்பாடாயிரு, முன்கருதலாயிரு, முன்கருது.
Anticipation
n. எதிர்பார்த்தல், கால முன்னிடைவு, முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல், முன்கருத்து, முன்னுணர்வு, முற்பாவனை, முன்சுவை, முன்முகம், (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.