English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Antimonite
n. கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
Antimony
n. அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
Anti-national
a. தாய்நாட்டுக்கெதிரான, நாட்டாண்மைக்கெதிரான, தேசிய எதிரியான.
Antinephritic
a. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
Antineutron
n. எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
Anting
n. எறும்பேற்றுதல், உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Antinodal
a. நள்ளிடைக்கணு சார்ந்த, கணு இடையிடத்தின் வலிவு மையம் சார்ந்த.
Antinode
n. நள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி.
Antinomian
n. அற மறுப்பாளர், அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர், அறங்கடந்த சமயப்பற்றாளர், கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர், (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத, ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Antinomic, antinomical
a. அறமுரணான, அறமுரணுடைய, முரணாணையான, உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
Antinomy
n. அறமுரண், முரண்பட்ட அறங்களின் இணைவு, ஆணை முரண், முரண்பட்ட கட்டளை இணைவு, மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண், முரணுரை.
Antiochian
n. சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய, பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய, அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Antiodontalgic
n. பல்வவி தடுக்கும் மருந்து, (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Antipapal
a. போப்பாண்டவர்க்கு எதிரான, போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
Antiparallel
n. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
Antipathetic, antipathetical
a. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய.
Antipathic
a. நேர் எதிர்ப்பண்புடைய, (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய.
Antipathist
n. வெறுப்பவர்.
Antipathy
n. இயல்பான வெறுப்பு, நீடித்த உவர்ப்பு, எதிர்உணர்ச்சி, பணபொவ்வாமை, பண்புமுரண், இயல்பான முரண்பாடு, வெறுப்புக்குரிய பொருள், வெறுப்புக்குரியவர்.
Antiperiodic
n. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.