English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clapper
-1 n. கை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
Clapper
-2 n. கற்பலகைகளால் அல்லது மரப்பலகைகளால் ஆன கரடு முரடான பாலம், மேடான நடைபாதை, முயல்வளை.
Clapperclaw
v. பிறாண்டித் தாக்கு, திட்டு, கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண்.
Clappers
n. pl. விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள்.
Clapping
n. அடிப்பதனால் எழும் ஓசை, கைதட்டல்.
Clap-sill
n. கால்வாய் அணை அடைப்பின் அடிவாய்ச்சட்டம்.
Claptrap
n. பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல், வெற்றுப்பசப்புரை, பகட்டு ஆரவாரக் கருத்து, (பெ.) பகட்டார வாரமான.
Claque, claquere
(பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம்.
Clarabella
n. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை.
Clarence
n. நால்வர் அமர உட்புறத்திலும் வலவன் அமர வௌதப்புறத்திலும் இருக்கைகள் அமைந்த நான்கு சக்கர வண்டிவகை.
Clarenceux, Clarencieux
n. (கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர், இரண்டாம் கட்டியர்.
Clarendon
n. கனத்த முகப்புவாய்ந்த அச்செழுத்து வகை, (பெ.) கனத்த முகப்பு வாய்ந்த.
Claret
n. பிரான்சிலுள்ள போர்டோ விலிருந்து தருவிக்கப்படும் திண்சிவப்பு இன்தேறல் வகை, (பெ.) திண் சிவப்பு நிறம் வாய்ந்த, (வி.) திண் சிவப்பு இன்தேறல் அருந்து.
Claret-cup
n. பனிக்கட்டி-சாராயம்-சர்க்கரை முதலியவை கலந்த திண் சிவப்பு இன்தேறல் கலவை வகை.
Clarient
n. (இசை.) மரத்தினாலான ஊது துளைக்கருவி வகை, இசைப் பெட்டியின் குழலிசைப்பகுதி.
Clarification
n. தௌதவு, தௌதவாக்கல், துப்புரவாக்கல்.
Clarifier
n. தௌதவாக்குபவர், தௌதயச் செய்யும் பொருள்.
Clarify
v. தௌதவுறும்படி செய், தௌதவாக்கு, துலக்கி அழுக்கு நீக்கித் துப்புரவாக்கு, பளிங்குபோல் ஆக்கு, வெண்ணெயைத் துப்புரவாக்கி நெய்யாக மாற்று, தௌதவாகு, துலங்கு, தௌதவுபடு, பளிங்கு போலாகு.
Clarinettist
n. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
Clarion
n. சில்லிட்டிசைக்கும் எக்காளம், எழுச்சியூட்டும் உரத்த ஒலி, எக்காள ஓசை, எக்காளத்தினது போன்ற ஓசை, (பெ.) தௌதவான, உரத்த.