English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Copy-book
n. கையெழுத்துச் சட்ட ஏடு, மேல் வரிச்சட்ட ஏடு.
Copyhold
n. படியுரிமை நிலம், படியுரிமை.
Copyholder
n. படியுரிமை நிலத்தவர், அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர்.
Copying-ink
n. பதிப்புப் படியெடுக்க உதவும் மை.
Copying-ink-pencil, copying-pencil
n. படியெடுக்க உதவும் வரைகோல்.
Copying-press
n. கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி.
Copyism
n. குருட்டுத்தனமாகப் பார்த்துப் பின்பற்றும் பண்பு.
Copyist
n. படி எடுப்போர், பார்த்து எழுதுபவர், தற்பண்பற்றுப் பிறரைப் பின்பற்றும் எழுத்தாளர்.
Copyright
n. பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை, ஏடு-படம்-பாடல்-நாடகம் முதலிய வற்றை ஆக்கிய மூல முதல்வருக்கு அல்லது அஹ்ர் ஆட்பேருக்கு அதை அச்சிட்டு வௌதயிட்டு விற்பனை செய்யவோ பாடவோ ஒலிப்பதிவு செய்யவோ நடிக்கவோ திரைப்படமாக்கவோ குறிப்பிட்ட ஆண்டு அளவுக்குச் சட்டம் அளிக்கும் தனியுரிமை, (பெ.) பதிப்புரிமை பெற்ற, தனிப்பயனீட்டுரிமைக் காப்புடைய, (வி.) பதிப்புரிமை பெறு.
Copy-writer
n. அச்சகத்தில் பகர்ப்பெழுத்தாளர், விளம்பரங்களின் படியெழுத்தாளர்.
Coque
n. இழைக்கச்சையின் சிறு கண்ணி, நாடாவின் வளை முடி.
Coquet
v. பொய்க் காதல் புரி, பசப்புக் காதல் புரி, பொழுது போக்காக விளையாடு.
Coquetry
n. போலிக்காதல் விளையாட்டு, பசப்பி ஏய்ப்பு, பகட்டு மினுக்கு, இழைவு குழைவு நயம்.
Coquette
n. தற்பெருமையுடன் மயக்கித் திரிபவன், மேனாமினுக்கி, பிலுக்குக்காரி, பகடி, பசப்புக்காரி, தலைச்சூட்டுடைய பாடும் பறவை வகை, (வி.) பொய்க்காதலோடு, போலிக் காதல் புரி, பசப்பி ஏய், பிணங்கி ஊடாடு, பிகுவுச் செய்.
Coquettish
a. நடிப்புக் காதல் புரிகிற, பசப்புக்காரிக்கு இயல்பான.
Coquito
n. சிலி நாட்டின் அழகான பனைவகை.
Cor
n. ஏறத்தாழ 11 மரக்கால் கொண்ட எபிரேய முகத்தளவை.
Cor anglais
n. (இசை.) வல்லொலித் துளைக்கருவி வகை.
Coracle
n. பரிசல், தோல் அல்லது மெழுகுத் துணி மூடிய கூடைவரிசலாலான நீள் வட்டமான சிறு படகு வகை.