English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Country-folk
n. pl. நாட்டுப்புற மக்கள், ஒரு நாட்டு மக்கள்.
Country-house, country-seat
n. உயர்குடியாளரின் நாட்டுப்புற மாளிகை.
Countryman
n. நாட்டுப்புறவாசி, உழவன், உடனொத்த நாட்டவர், ஒரே நாட்டில் உடனொத்து வாழ்பவர்.
Countryside
n. நாட்டுப்புறம், நாட்டுப்புறச் சூழிடம்.
Countrytown
n. நாட்டுப்புற மாவட்டத்திலுள்ள சிறு நகரம்.
Countrywide
a. நாடெங்கும் பரவிய, தேசமளாவிய.
Country-woman
n. நாட்டுப்புற மகள், உடனொத்த நாட்டைச் சார்ந்தவள்.
Countship
n. கோமகனின் படி நிலை, கோமகனின் ஆட்சி வட்டாரம்.
Count-wheel
n. மணியாழி, மணிப்பொறி, மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி.
County
n. பிரிட்டனின் மாவட்டம், பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம், நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை, (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த, பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.
Coup
n. வலங்கொண்ட வீச்சு, வல்லடி, வெற்றிகரமான முயற்சி, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பையில் பந்தின் வெற்றிகரமான நேரடி வீழ்ச்சி.
Coupe
n. வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி, ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி, பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி, இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம், (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட, கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
Couple
n. இருவர், துணைவர், இரண்டு, துணையிணை, சோடி, மணத்துணைவர், தம்பதிகள், ஆடல் துணைவர், ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை, மோட்டின் இணைவிட்டம், இரண்டின் இணைப்பு, (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு, (வி.) இரண்டு ஒன்றாய் இணை, சோடியாக்கு, மணவினையால் இணை, வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு, ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை, இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து, கருத்துடன் கருத்து இணை.
Couplement
n. இணைப்பு, இரட்டை, இணை.
Coupler
n. இணைப்பவர், இணைக்கும் பொருள், ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு.
Couplet
n. சோடி, இணை, இரட்டைகள், இரட்டையர், ஈரடிச் செய்யுள், குறளடிப்பா.
Coupling
n. இணைத்தல், இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு, புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு.
Coupling-box
n. இயந்திரச் சுழல் அச்சக்களின் கோடிகளை இணைக்கும் இருப்பு வளையம், சுழலச்சுக்களை இணைக்கும் இருப்புப் பெட்டி.
Coupon
n. அடையாளச்சீட்டு, கைச்சீட்டு, சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு, பற்றுரிமைச் சீட்டு, பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு, தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.
Courage
n. வீரம், துணிவு, ஆண்மை, மனஉரம்.