English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cross-fire
n. (படை.) இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் பீரங்கிக் குண்டுவீச்சு.
Crossfish
n. நட்சத்திர மீன், ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட கை போன்ற உடலுறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
Cross-gained
a. மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய, தாறுமாறான இழை வரிகளையுடைய, வேண்டுமென்றே நெறிபிறழ்வான, வழிக்குக் கொண்டுவர முடியாத, முரண்டுபிடிக்கிற, (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே, வேண்டுமென்றே நெறி பிறழ்வாக, அழும்பாக.
Cross-garnet
n. மேல்கீழ்த் திருகுமுனையுடைய கதவுக்கீல்.
Cross-grain
n. நுண் இழைவரிக்கெதிரான நுண் இழைவரி.
Cross-guard
n. (படை.) வாள்பிடியில் தாக்குக் காப்பான குறுக்குமுளை, பிடிகாப்பு.
Cross-hatch
v. ஓவியத்தில் வலைகோடுகளிட்டு நிழற்சாயல் காட்டு.
Cross-hatching
n. ஓவியத்தில் நிழந்சாயல் காட்டும் வலைக்கோட்டுப்பின்னல்.
Cross-head
-1 n. குறுக்குத்தலைப்பு, செய்திதாளில் பத்தியில் வருபொருளைச் சுருக்கமாக உணர்த்தும் இடைத்தலைப்பு.
Cross-head
-2 n. நீராவிப்பொறி போன்றவற்றில் முகட்டுக் குறுக்கு விட்டக்கோல்.
Crossing
n. சிலுவைக்குறி போடுதல், குறுக்கே செல்லுதல், பாதைகள் குறுக்கிடுமிடம், திருக்கோயில் குறுக்கிடைகழி, தெருக்கடப்பதற்குரிய இடம், குறுக்கிட்டுப் பாழாக்குதல், இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
Crossing-over
n. (உயி.) இனக்கீற்றுக்கள் இணைகூடி மீண்டும் பிரியும்போது அவற்றின் உறுப்புக்கள் ஒன்றற்கொன்று மாறிப்போதல்.
Crossing-sweeper
n. கடவுபெருக்குபவர், தெரு கடக்கப்படும் இடத்தைப் பெருக்குபவர்.
Cross-jack
n. (கப்.) சதுரப் பாய்மரவகை.
Crossleaved
a. எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
Cross-legged
a. சப்பணம் போட்டுத் தரையில் அமர்ந்திருக்கிற, கால்மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிற.
Cross-light
n. ஔதக்கோடு ஒன்றினைக் குறுக்கிட்டுச் செல்லும் மற்றோர் ஔதவிளக்கம், மற்றொரு கோணத்திலிருந்து பொருளை விளக்குதல்.
Cross-over
n. மேற்கவிபாதை, பாதைமேலாகச் செல்லும் பாட்டை.
Cross-patch
n. சுடுமூஞ்சிக்காரர், சிடுசிடுப்பானவர்.