English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Chain-drive
n. சங்கிலியின்மூலம் ஆற்றல் தொடுப்பு.
Chain-driven
a. இணைப்புச் சங்கிலியின்மூலம் சக்தியை இயக்குவிக்கின்ற.
Chained
a. விலங்கிடப்பட்ட, கட்டப்பட்ட, சங்கிலியால் மாட்டப்பட்ட.
Chain-gang
n. தொடர்சங்கிலியினால் இணைக்கப்பட்ட கைதிகள் தொகுதி.
Chain-gear, chain-gearing
n. சுழலும் பற்சக்கரங்கள் மீது சுற்றிச்சுற்றி வரும் சங்கிலி அமைவு.
Chain-less
a. விலங்கற்ற, சங்கிலி இல்லாத, தடையற்ற.
Chainlet
n. சிறு சங்கிலி.
Chain-letter
n. பெறுபவர் படியெடுத்து அனுப்புவதன் மூலம் எல்லையற்றுப் பெருகித் தொடர்ந்து செல்லும் சங்கிலித் தொடர் முறைக் கடிதம்.
Chain-lightning
n. தொடர் வெட்டு மின்னல், கடுமையான விஸ்கி வகை.
Chain-moulding
n. (க-க.) சங்கிலி வளைய உருவமைப்பு.
Chainpier
n. சங்கிலிக் கடற்பாலம், சங்கிலி அமைப்பாதரவுள்ள அலைதாங்கி.
Chainplates
n. pl. கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள்.
Chain-pump
n. முடிவற்ற சங்கிலியில் இணைத்த நீர் இறைக்கும் குக்ஷ்ய்.
Chain-reaction
n. செயல் விளைவுத் தொடர்.
Chainrule
n. (கண.) தொடர் தகவுமுறை, தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை.
Chain-shot
n. கப்பல் பாய்மரத்தை வெட்ட உதவும் சங்கிலியின் ஓரக்குண்டு.
Chain-stitch
n. சங்கிலி வளையத் தையல்.
Chainwork
n. சங்கிலி இணைப்புப் போன்ற வேலை, வலைப்பின்னல்.
Chair
n. நாற்காலி, சாய்விருக்கை, பணிமுதல்வர் பீடம், தலைவர் இருக்கை, தலைவர் பதவி, தலைவர், தலைமை, கூட்டத்தலைவர் பதவி, இருக்கை, பேராசிரியர் பதவி, மாநகர் முதல்வர் பதவி, தனிமனிதர் இருக்கை ஊர்தி, தூக்கு நாற்காலி, அமர் சிவிகை, தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு, சான்றுப் பெட்டி, சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி, (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி, வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல், கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Chairman, n. pl. chairmen
கூட்டத்தலைவர், தூக்கு நாற்காலியைச் சுமந்து செல்பவர்.