English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Check-nut
n. தடுப்பு மரை, மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு.
Check-rein
n. குதிரை தலைகுனியாதபடி செய்யும் கடிவானவார், குதிரையின் கடிவாளத்தை அடுத்த குதிரையின் வாய்முள்ளுடன் இணைக்கும் வார்.
Check-string
n. வண்டியை நிறுத்துமாறு வலவனுக்குப் பிரயாணி உணர்த்துவதற்குரிய அமைவின் கயிறு.
Check-taker
n. கொட்டகை அடையாளச் சின்னம் திருப்பி வாங்குபவர்.
Check-till
n. கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
Check-up
n. சோதிப்பதற்கான நுண்ணாய்வு.
Check-weigher
n. சுரங்க வாயிலில் நிலக்கரியின் எடையைச் சரிபார்ப்பவர்.
Cheddite
n. ஆற்றல் மிக்க வெடி மருந்து வகை.
Cheek
n. கன்னம், கவப்பு, (பே-வ.) துடுக்குதனம், நாணமில் நடத்தை, மட்டு மீறிய தன்னம்பிக்கை, கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால், குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார், குறட்டியின் பக்கக்கை, இயந்திரத்தின் சிறையலகு, கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம், (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Cheek-bone
n. கன்ன எலும்பு.
Cheekiness
n. திண்ணக்கம், திமிர்.
Cheekly
a. துடுக்குத்தனமான, ஆவணமான.
Cheek-pouch
n. தாடைப்பை, குஜ்ங்கினது போன்ற கன்னத்தின் தொங்கு சதை.
Cheek-tooth
n. பின்கடைவாய்ப் பல்.
Cheep
n. பறவைக்குஞ்சு கீச்சிடும் ஒலி, (வி.) பறவைக் குஞ்சு போல் கீச்சிடு.
Cheeper
n. கீச்சிடும் பறவைக் குஞ்சு, கவுதாரிக் குஞ்சு.
Cheer
n. மகிழ்ச்சி, மனநிலை, ஊக்குரை, மகிழ்ச்சிக்குரல், பாராட்டொலி, முகமனுரை, வரவேற்பு, அன்பாதரவு, விருந்துணவு, (வி.) மகிழ்வி, கிளர்ச்சியூட்டு, ஊக்கு, ஊக்கொலி எழுப்பு, மகிழ்ந்தார்ப்பரி, பாராட்டு, களிகொள், ஆறுதல் கொள்.
Cheerful
a. மனநிறைவோடு கூடிய, மனமகிழ்வோடிருக்கிற, நல்லார்வம் கொண்டுள்ள, எழுச்சி தருகிற, இன்பமான, விருப்பமுள்ள, இணங்கும் மனப்பாங்குடைய, இன்முகமான.
Cheerily
adv. இன்ப மனஎழுச்சியுடன்.
Cheeriness
n. முகமலர்ச்சி.