English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Disprroportionate
a. அளவொவ்வாத, உரு ஒப்பில்லாத, அளவு மீறிப் பெரிதான, அளவுமீறிச் சிறிதான.
Disputable
a. விவாதத்துக்குரிய, எதிர்வாதத்துக்கிடன்ன, கருத்து வேற்றமையுள்ள, ஐயத்துக்குரிய.
Disputation
n. வாக்கவாதம், சொற்போராட்டம், நீண்ட வாத எதிர்வாதம்.
Disputatious, disputative
a. வாதாடும் இயல்புடைய, மறுத்துப்பேசுகிற.
Dispute
n. விவாதம், வாதாடல், ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு, கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை, ஐயத்துக்குரிய நிலை, வாய்ச்சண்டை, சொற்பூசல், (வினை) வாதாடு, விவாதம்செய், ஆய்வு செய், வாய்ச்சண்டையிடு, போராடு, கேள்வி எழுப்பு, எதிர்த்துக்கேள், மறுத்துரை, படையெடுப்பை எதிர்த்துத் தடு, போட்டிக்கு நில், வெற்றி நாடிப் போராடு.
Disqualification
n. தகுதியின்மை, தகுதிக்கேடு செய்யும் கூறு.
Disqualify
v. தகுதி கெடு, தகுதியற்றவராக்கு, சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து, உரிமையைத் தள்ளுபடிசெய், தகுதியற்றவரென அறிவி, தகுதி மறு, தகுதியின்மை காரணமாகத் தடு.
Disquiet
n. அமைதியின்மை, மன உலைவு, கவலை, கலக்கம், (பெயரடை) அமைதியற்ற, கவலைகொண்ட, (வினை) அமைதிகேடு, மனங்கலங்கச் செய், தொந்தரவுகொடு.
Disquisition
n. ஆய்வாராய்வு, விரிவகலமான நுண்ணாய்வு, வாத எதிர்வாதங்களை விரித்துச் சொல்லும் ஆஜ்ய்ச்சிக் கட்டுரை.
Disquisitional, disquisitionary, a.
ஆய்வு சார்ந்த, விளக்கமான ஆராய்ச்சி இயல்புடைய.
Disquisitive
a. ஆய்வு சார்ந்த.
Disrate
v. சிறிய அதிகாரியின் நிலைக்கு இறக்கு, படி தாழ்த்து.
Disregard
n. கவனியாதிருத்தல், புறக்கணிப்பு, மதியாமை, அசட்டை மனப்பான்மை, (வினை) புறக்கணி, மதியாதிரு, அசட்டை செய், அற்பமாகக் கூறு.
Disrelish
n. சுவைகேடு, உவர்ப்பு, வெறுப்பு, (வினை) உவர்ப்புக் கொள், வெறு, வெறுப்புணர்ச்சிகொள்.
Disrepair
n. பழுதுற்ற நிலை, சீர்கேடான தன்மை, பழுதுபாரா மோசா நிலைமை.
Disreputable
a. இழிவான, மானக்கோடான, ஒழுங்கற்ற, இழிதோற்றமுடைய, மதிப்பற்ற.
Disrepute
n. இகழ்ச்சி, பழி, பெருமையழிவு, மானக்கேடு.
Disrespect,
அவமதிப்பு, மதிப்புகேடு.ந்ண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீ
Disrespectful
a. அவமதிப்புக் காட்டுகிற, பணிவிணக்கமில்லாத.
Disrobe
v. உடைகளை, ஆடையகற்று.