English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Equinoctial
n. நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம், (பெ.) பகலிரவு சமமான, பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற, பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற, நிலநடுக்கோட்டிலுள்ள, நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Equinoctials
n.pl. நடுநிலக் கோட்டருகில் வீசுவதாகக் கருதப்படும் புயற்காற்றுக்கள்.
Equinox
n. ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
Equinoxes
n.pl. ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் இரண்டு இடங்கள்.
Equip
v. படைக்கலம் பெறுவி, போர்தளவாடங்கள் சேகரித்தளி, முன்னேற்பாடுகள் செய்து வை, பயணசாதன வாய்ப்புக்களை அமைவி.
Equipage
n. துணைப்பொருட் சாதனங்கள், பயணத்துக்கு வேண்டிய ஆடை அணிமணி ஆள் துமுணையாதரவுகளின் தொகுதி.
Equipoise
n. சரி அமைதி நிலை, சரியீட்டமைதி, சரிக்கட்டும் பொருள், (வினை) ஈடுகட்டு, சரிக்கட்டு, மனத்தை இரு திறமும் சாரா நிலையில் வை, பற்றற்றிரு.
Equipollent
n. சரிசம ஆற்றல்வாய்ந்த பொருள், செயற்களத்தில் சம மதிப்புள்ள பொருள், (பெ.) சரிசம ஆற்றல் கொண்ட, செயற்களத்தில் சம மதிப்புள்ள.
Equiponderate
v. சரியீடுகட்டுட, எதிர்ப்புறம் சரிசமமாயிரு.
Equipotential
a. விசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய.
Equitable
a. நேர்மையான, நடுநிலை அணைவான, சட்ட நோக்கிலில்லாவிட்டாலுமுழூ நேர்மை நோக்கில் உரியதான.
Equitation
n. குதிரையேற்ற உலா, குதிரையேற்றத் திறம்.
Equity., b.
சரி ஒப்புரவு, நடுநிலை நேர்மை இலக்கு, சட்ட நடைமுறைக்குத் துணைநிறைவான நேர்மைத் தத்துவங்களின் தொகுதி, பொதுச் சமுதாயச் சட்டங் கடந்த அடிப்படை இயற்கை நீதி ஒப்புரவுப்பண்பு, அடகு வைக்கப்பட்ட பொருளில் கட்டணம் குறைக்கப்பட்ட நிகர மதிப்பு.
Equivalent
n. இணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.
Equivocal
a. இருபொருள் மயக்கமுள்ள, தௌதவில்லாத இயல்புடைய, உறுதியற்ற தன்மையுள்ள, முடிவியல்பு அற்ற, ஐயப்படுவதற்கு இடம் தருகிற.
Equivocate
v. இருபொருள் மயக்கமுள்ள சொற்களைப் பயன்படுத்து, மழுப்பிப்பேசு, சாக்குப்போக்குக் கூறி ஏமாற்று, மெய்யை மறை, தவறான கருத்துத் தூண்டு.
Equivoke, equivoque
சிலேடை, இருபொருள் மயக்கம்.
Equlity
n. சமநிலை, சரி நிகர்வு, ஒப்பு.
Equuilibrist
n. நடுநிலை அமைதிபேணிக் கயிற்றின்மீது நடப்பவர் கழைக்கூத்தாடி.
Era
n. ஊழி, வரராற்றப் பிரிவு, காலப்பெரும் பிரிவு, காலக்கணிப்புமுறைத் தொடக்கம்.