English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gangster, n.,
கொள்ளைக்கூட்டத்தான்.
Gangue
n. கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
Gangway
n. இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி, கப்பல் ஏற்ற இறக்க இடைவழி, ஊடுவழி, சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
Ganister
n. உலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை.
Gannnet
n. வாத்துப்போன்ற கடற்பறவை வகை.
Ganoid
n. பளபளப்பும் வழவழப்பும் உடைய மீன் செதில்கள், பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த மீன், (வினை)பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த,பளபளப்பும் வழவழப்பும் உடைய.
Ganoin
n. மீன் செதில்களுக்குப் பளபளப்பைத் த சுண்ணச்சத்து.
Gantlemanlike
a. நன்மகனுக்குச் சிறப்பியல்பான, நன்மகனுக்குகந்த, பெருந்தன்மையான, பண்பாளருக்குரிய.
Gantry
n. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி, பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம்.
Ganymede
n. கலமேந்தி, உணவுவிடுதிச் சிற்றான், (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்.
Gaol
n. காவற்கூடம், சிறைச்சாலை, (வினை) சிறையிடு.
Gaol-bird
n. அடிக்கடி சிறைசெல்பவர்.
Gaol-delivery
n. மொத்தவிசாரணை, விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல்.
Gaoler
n. சிறைச்காவலர், சிறைக்காவற் பொறுப்பாளர்.
Gaol-fever
n. சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல்.
Gap
n. பிளவு, வெடிப்பு, கீறல், உடைப்பு, தொடர்ச்சியில் இடை முறிவு, இடையீடு, இடைவௌத, இடுங்கிய வழி, மலையிடைக் கணவாய், மலைக்குவடுகளின் இடைப்பாளம், வேலி இடைவௌத, இடைவாயில், பள்ளம், விடர், கருத்திக்களிடையே வேறுபாடு, பண்புகளிடையே அகல்முரண்பாடு, ஆட்களிடையே ஒப்புணர்வின்மை, (வினை) பிளவு உண்டுபண்ணு.
Gape
n. வாய்பிளத்தல், வாய்பிளப்பெல்லை, வாய்பிளப்புக் கோணம், அலகுதிறப்பெல்லை, திறக்கும் அலகுக் கூறு, (வினை) வாயைப்பிள, கொட்டாவிடு, திற, அகலமாகத் திறக்கப்பெறு, உற்றுநோக்கு, வியப்போடு நோக்கு, திகைத்துப் பார்.
Gaper
n. வியப்போடு உற்றுநோக்குபவர், பறவை வகை, நத்தைவகை.
Gappy
a. இடைவௌதகள் நிறைந்த, பிளவுகளுள்ள, இடைமுறிவுப்ள் உள்ள.
Garage
n. பொறிவண்டிக்கொட்டில், மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில், (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.