English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hardihood
n. நெஞ்சுரம், அஞ்சாமை.
Hardish
a. சற்றே கடினமான.
Hard-laid
a. கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.
Hardly
adv. கடினமாக, கொடுமையாக, இடர்ப்பட்டு, கண்ணற்று, அரிதாக, போதாமல்.
Hard-mouthed
a. கடிவாளத்தினால் எளிதிற் கட்டுப்படுத்த முடியாத, எளிதில் மேலாண்மை செய்ய இயலாத.
Hardness
n. வன்மை, திண்மை, வன்குணம், (கனி.) மற்றொன்றைக் கீறும் ஆற்றல், மற்றொன்றின் கீறலைத் தாங்கும் ஆற்றல்.
Hard-pan
n. மேலீடான மண்ணுக்கு அடிப்படையாயுள்ள கெட்டியான நிலப்படலம், மிகக்கீழான மட்டம்.
Hard-paste
a. சீனக் களிமண்ணினாலும் கருங்கற் பொடியினாலும் செய்யப்பட்ட.
Hard-pressed, hardpushed
a. இக்கட்டுகளுக்காளான.
Hard-riding
a. குதிரையேறி விரைந்து செல்லுகிற.
Hard-run
a. பெரிதும் நெருக்கப்பட்ட, அலக்கண் உற்ற.
Hard-set
a. இன்னல்களால் நெருக்கப்பட்ட, உறுதியான, வளையாத, முறைப்பான.
Hardshell
a. கெட்டியான தோட்டிளையுடைய, பிடிவாதமாகப் பழமைக்குக் கட்டுப்பட்ட, விடாப்பிடியான.
Hardship
n. இன்னல், துன்பம், வறுமை, படமுடியாத்துயரம், தீவினைப் பயன், பொல்லாங்கான சூழல்.
Hard-visaged
a. வெறுப்புணர்ச்சி தூண்டும் அல்லது விகாரமூட்டும் முகத்தோற்றமுடைய.
Hardware
n. இரும்பு-செம்பு போன்ற வலிய உலோகங்களாற் செய்யப்பட்ட பொருள்கள், இரும்பு செம்பு வாணிகம்.
Hardwareman
n. இரும்புச்சாமான் வணிகன், கன்னான்.
Hardwares
வன்மாழைகள், வன்மாழையகம், வன்சரக்கு, இரும்புக்கடை
Hard-won
a. அரிதிற் பெற்ற.
Hardwood
n. இலையுதிர்க்கும் மரவகைகளின் வயிரம் பாய்ந்த கட்டை.