English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Smit
v. (செய்.) 'சிமைட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Smite
n. (பே-வ) அடி, தாக்கு, முஸ்ற்சி, (வினை,) அடி, தாக்கு, வாளால் வீக்கு, வெட்டு, கொல்லு, முற்றிலும் தோற்கடி, கடுந்தோல்வியுறச்செய், கடுந்தண்டனை அளி, நோய் வகையில் பீடித்தல் செய், தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி, அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு, அழகுவகையில் பற்றி வீழ்த்து, காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து, திடுமென வந்துறு, திடுமென வந்து கேடுசெய்வி, துன்புறுத்து, மனம் புண்படுத்து, வீழ்த்து, வீழ்ச்சியுறுவி.
Smith
n. கம்மியர், உலோக வேலையாளர், கொல்லர், இரும்படிப்பவர், உருவாக்கத்தொழிலர், (வினை.) கம்மியர் வேலை செய், உருவாக்கு, உருக்கிப் படைத்தாக்கு.
Smithereens, smithers
தூள்கள், துண்டுதுணுக்குகள், சுக்குநீறு.
Smithery
n. உலோகத்தொழிலாளர் பட்டறை, கொல்லர் பட்டறை, கப்பற்படை நிலையப்பட்டறை.
Smithfield
n. லண்டனிலள்ள இறைச்சிக்கடை.
Smithy
n. பட்டறை, கொல்லுலை, கொல்லன் உலைக்களம், கொல்லர் தொழிற்கூடம்.
Smitten
-1 a. கடிக்கப்பட்ட, நோய்வகையில் பீடிக்கப்பட்ட, ஆசைவகையில் பற்றப்பட்ட, கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட, பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட.
Smitten
-2 v. 'சிமைட்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Smock
n. குழந்தை முழுமேலங்கி, பெண்டிர் உள்ளாடை, (வினை.) சுருக்கக் கண்ணறை ஒப்பனை செய், ஆடையில் முகட்டுச் சுருக்கம் வைத்துத்தைத்துத் தேன் கூடுபோன்ற கண்ணறை ஒப்பனைவேலைப்பாடு செய்.
Smock-frock
n. முகட்டுக் கொய்வகப்புறச்சட்டை, முகட்டுச்சுருக்கம் வைத்துத்தைத்த தொழிற்கள வேலையாளின் உட்சட்டை வடிவப் புற உடுப்பு.
Smocking
n. சுருக்கக் கண்ணறை ஒப்பனை உடுக்கை, முகட்டுச் சுருக்கத்துடன் தேன் கூடுபோன்ற கண்ணற்ற ஒப்பனை வேலைப்பாடுடைய உடுப்பு.
Smock-mill
n. முகட்டுப்பகுதி மட்டும் சுழலும் காற்றுவிசை.
Smog
n. புகைப்பனி மூடாக்கு, புகையார் மூடுபனி.
Smoke
n. புகை, புகையாவி, புகைப்படலம், ஆவி, புகைபோன்ற பொருள், எரிபொருளாவி, ஆவிச் சுழலலை, நீராவிப்படலம், பனியாவி, தூசிப்படலம், உறைபனி மூடாக்கு, வெற்றுப்பொருள், பயனில் பொருள், வெறுமை, இல்பொருள், புகையிழுப்பு, ஒருமுறை, புகைகுடிப்பு, (இழி.) சுருட்டு, (இழி.) பூஞ்சுருட்டு, (வினை.) புகைவுறுவி, புகைவுறு, புகைந்ததெரி, எரியாது, புகைந்துகொண்டேயிரு, கருகு, உட்புகைவுறு, புகைவீசு, புகை வௌதயிடு, நீராவி வௌதவருவி, ஆவி வௌதயேற்று, கருக்கு, புகைக்கறைப் படுத்து, புகைக்கரியேற்று, புகைக் கருமையூட்டு, புகைபடிவி, தௌதவற்றதாக்கு, புகைச் சுருட்டுக் குடி, புகைக்குழல் உறிஞ்சு, பூஞ்சுருட்டுப் புகையாகு, புகையை உள்ளிழு,புகையை வௌதயூது, புகை மண்டுவி, புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து, புகை மண்டு, மூச்சுத்திணறடி, புகையடிக்க வை, உணவு புகைமண்டிச் சுவை கெடுவி, புகையூட்டித் துப்புரவு செய், புகைப்பதனமிடு, புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி, புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு, புகைகுடி மூலம் ஆக்கிப்படை, ஐயங்கொள், துப்புக் கண்டுபிடி, கூர்ந்து புலங்காண், தொடர்ந்து வேவாடு, பின்பற்றிக் கவனி.
Smoke-ball
n. புகைத்திரை ஏவுகுண்டு, மூடாக்குப் புகைப்படலமிடப் பயன்படும் விசைக்குண்டு, உறிஞ்சுவளிக்குளிகை, காசநோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை.
Smoke-bell
n. மச்சடி விளக்குக்காப்பு, தொங்கல் விளக்கின் மேல்தளக் காப்பான மணிக்கவிகை.
Smoke-black
n. புகைக்கரி.
Smoke-consumer
n. புகைவாங்கி.
Smoked
a. புகைபடிவிக்கப்பட்ட, புகைப்பதனஞ் செய்யப்பட்ட.