English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Warty
a. பாலுண்ணிபோன்ற, பாலுண்ணிபோன்ற புடைப்புகள் நிறைந்துள்ள.
War-whoop
n. அமெரிக்க செவ்விந்தியரின் போர்க்கூக்குரல்.
War-worn
a. போர் அனுபவமுடைய, போரால் பாழடைந்த.
Wary
a. இடையறா விழிப்புடைய, இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய, தளரா உன்னிப்புடைய.
Was
v. 'பீ' என்பதன் தன்மை-படர்க்கை இடங்கள் சார்ந்த ஒருமை இறந்த கால வடிவம்.
Wash
n. கழுவுதல், கழுவப்பெறுதல், ஆடை துவைப்பு, ஆடை அலக்கீடு, வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி, வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி, வெளுத்து வந்த துணிமணித்தொகுதி, நீரலம்பீடு, நீரலம்பொலி, நீர்போழ் வலைவு, கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள், நீரரிப்பு, நீரரிப்பு மண், நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண், அரிப்பு வண்டல், ஆறிடுமண், கழிவுக்கழுநீர், பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர், பாழ்ங்கஞ்சி நீர், செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம், மட்ட நிர்மம்,பிதற்றல், பயனற்ற பேச்சு, கழுவுநீர்மம், அலம்புநீர்மம், நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம், மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம், மேற்பூச்சு வண்ண நீர்மம், ஒப்பனை நீர்மம், நீர்வண்ணச்சாயம், (வினை.) கழுவு, அலம்பு, மேலோடி அலம்ப விடு, அலம்பிச் செல், உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு, கழுவித் துப்புரவுப்படுத்து, கழுவிக் கறைநீக்கு, அலக்கு, சலவைத்தொழில் செய், ஆடைவெளு, சாயப்பொருள், வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு, ஈரமாக்கு, ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு, பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல், பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு, குடைந்தெடு, தோண்டு, நீர் சிதறடித்துக்கொண்டு செல், துடைத்தழித்துக்கொண்டு செல், உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு, தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு, மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Wash-basin
n. அலம்பு தட்டம்.
Wash-board
n. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை.
Wash-boiler
n. வௌளாவிச் சால்.
Washer
n. கழுவுபவர், அலம்பும் இயந்திரம், அலக்குபொறி, சுரியாணி மரைக்குக் கீழிடும் பட்டை வளையம், (வினை.) பட்டை வளையம் பொருத்து.
Washiness
n. மிகுதியும் நீர்கலந்த நிலை, நீராளமான நிலை, நொய்ம்மை.
Washing
n. வெளுப்பு, அலம்பீடு, நீர்மத் தோய்வு, நனைவு, நீர்தேய்ப்பு, நீர்நனைப்பு, நீர்மத்தோய்ப்பு, சலவைக்கு அனுப்பப்படுந் துணிகள்.
Washing powder
சலவைத்தூள்
Washington
n. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித் தலைமை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆட்சித்தலைமையிடம்.
Wash-leather
n. மென்பதத்தோல்.
Wash-out
n. பெருமழை உடைப்பு, முழுத்தோல்வி, இலக்கு எய்தா முடியா நிலை, முறிவு.
Wash-pot
n. கைகழுவுகலம், வௌளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வௌளீயங்கொண்ட கலம்.
Washy
a. பாழ்ந்தௌதவான, நீராளமமான, மிகுநீர் கலந்த, திட்பமற்ற.