English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chewet
-1 n. காக்கையினம் சார்ந்த செங்காற் பறவை.
chewing-gum
n. அதுக்கும் சவ்வு.
chewink
n. சிவந்த கண்களையுடைய குருவி வகை.
Chian
a. கிரேக்க நாட்டை அடுத்த கீயாஸ் என்ற தீவுக்குரிய.
Chianti
n. இத்தாலி நாட்டு முந்திரித் தேறல் வகை.
chiarouscuro
n. ஒவிய ஒளி நிழல் வண்ண நயம், ஒளி நிழல் வேறுபாடு, இலக்கியத்தில் முரண் நயத்திறம், படிமாற்ற மென்னயப்பண்பு, முனைப்பகழ்வு வேறுபாடு, (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய, அரைகுறையாக வெளிப்படுகிற, தௌிவுக் குறைவான.
chiasm, chaisma
(உள்.) கண் நரம்புக் குறுக்கீடு.
chiasmus
n. முரண்தொடர் அணி நயம், சொற்றொடரில் முற்பாதியின் முறை பிற்பாதியில் மாறுபட அமைத்தல்.
chiastic
a. தொடரில் முன்பின் முரண்நயமுடைய.
chibol
n. வெங்காயத்தூள், பசுந்தாளுடன் கூடிய வெங்காய முளை.
chibouk, chibouque
நீள் புகையிலைக் குழாய்.
chic
n. (பிர.) நயம், நேர்த்தி, ஒயில், கலைநயத்திறம், ஆணித்தரம், மேம்படு தகுதி, (பெ.) ஒயிலான, புத்தம் புதுப்பாணியான, நடைநயப் பகட்டுடைய.
chicane
n. ஏய்ப்பு, ஏமாற்று, கை மோசம், கைச்சாலம், புரட்டு, சீட்டாட்ட வகையில் துபுச்சீட்டில்லாத கைவரிசை, (வி.) ஏய், பொறியில் சிக்க வை, மோசம் செய், கைத்தந்திரத்தால் ஏமாற்று.
chicaner
n. ஏமாற்றுபவன், எத்தன்.
chicanery
n. சட்டப்பொறியில் சிக்க வைத்தல், குறுஞ்சூழ்ச்சி, வாயடி, போலிவாதம், சொற்புரட்டு.
chicaning
n. சொற்பொறி, சொல்மாறாட்டம்.
chicatricle, cicatricula, cicatricule
n. முட்டை மஞ்சட் கருவின் முளை உயிர்க்கும் முனை.
chich
n. சணகம், கடலையினைப் பயறு.
chicha
n. சோளத்திலிருந்து வடித்த தென்னமெரிக்கத் தேறல் வகை.