English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
choose
v. தேர், பலவற்றினின்று தேர்ந்நெடு, பொறுக்கியெடு, ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு, விரும்பித்தேர், விருப்பந்தெரிவி, விரும்பு, துணிந்தெடு, துணி, தேர்வுசெய், தக்கதெனக் கருது, ஒரு முகமாகத் தீர்வு செய், பிரதிநிதியாகத் தெரிவுசெய், துணைவராகத் தேர்ந்துகொள்.
chooser
n. தெரிந்தெடுப்பவர்.
chop
-1 n. வெட்டுதல், வெட்டிக் கூறுபடுத்திய உணவு, வெட்டுத்துண்டு, கறித்துண்டு, எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம், நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம், பிளவு, (வி.) வெட்டு, துண்டித்துத் தள்ளு, குறுக நறுக்கு, ஒலி, குத்து, இடி, தட்டு, திடுமெனச் செல்லு, தற்செயலாக எதிர்பாராது வருகை அளி, பிளவுறு, திசையில் வெட்டிச்செல், முட்டிச்செல்.
chop-chop
விரைவாக, உடனடியாக, தாமதமின்றி.
chop-fallen
a. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த.
chop-house
n. மலிவான உணவுவிடுதி.
chop-logic
n. விதண்டாவாதம், நச்சுவாதம்.
chop-sticks
n. pl. சீனர் ஒரு கையால் உணவெடுத்தருந்தப் பயன்படுத்தும் தந்தத்தாலான குச்சியிணை.
chop-suey
n. சீன நாட்டில் நல்லெண்ணெய்த் தாளித்த புலவுச் சோறுவகை.
chopin
-1 n. பிரான்சின் நீர்மங்களுக்குரிய பழங்காலச் சிறுமுகத்தலளவைக் கூறு.
chopin(2), chopine
n. சேற்றில் செல்வதற்கு உதவியாகப் புதையடிகளுக்கிடும் உயரிய அடிக்கட்டை.
chopper
n. வெட்டுபவர், தறிப்பவர், கைக்கோடரி, வெட்டுக்கத்தி, விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை.
chopping
n. வெட்டுதல், சிதைத்தல், வெட்டுத்துண்டுகளின் தொகுதி, வெட்டப்பட்ட அளவு, குறைக்கப்பட்ட பொருள், மஜ்ம் வெட்டப்பட்டுக் கிடக்கும் காட்டுப்பகுதி, (பெ.) வெட்டுவதற்குரிய, நிலையற்ற.
chopping-block
n. தறிப்பதற்குரிய அடிக்கட்டை, பட்டடைக்கட்டை.
chopping-knife
n. வெட்டுக்கத்தி.
choppy
-1 a. கீறல் நிறைந்த, மேடுபள்ளமான, கரடுநிரடான, கொந்தளிப்பான.
chops
n. pl. குறட்டின் கௌவு வாய், பீரங்கியின் பேழ் வாய், உப்பலான முகமுடையவர்.
choragic
a. ஆடல்பாடல் குழுத்தலைவருக்குரிய.
choragus
n. கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர், ஆடல்பாடல்குழு இயக்குநர்.
choral
-1 n. எளிய இன்னிசைப்பாட்டு, தேவபாணிப் பாசுரம், ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.