English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
choralist
n. பாடற்குழுவினர், பாடகர் குழாத்தின் உறுப்பினர், பாடுவார்.
chorally
adv. ஒரே பாடற்குழுவாக, பாடற்குழுவுக்கேற்ப, பாடகர் குழாத்தினைச் சார்ந்து, பாடகர்குழு உடனிசைக்கும் நிலையில்.
chord
-1 n. யாழ்நரம்பு, வீணைக்கத்தி, (உட.) திண்ணிய நரம்பு நாளம், நாடி, (வடி.) வில்வளைவின் நாண்வரை.
chordal
a. யாழ்நரம்பு சார்ந்த, நரம்பு நாளம் சார்ந்த, நாண்வரைக்குரிய, தளைநாண்போன்ற, நிற இயைபுக்குரிய, தளைநாண் போன்ற, நிறஇயைபுக்குரிய, சுரஇயைபு சார்ந்த.
chordate
n. தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர்.
chore
n. இடைக்கால வேலை, அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை, (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய், வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய், அவ்வப்போது தற்காலத்திய வேலை செய்.
chorea
n. (ல.) காக்காய் வலிப்பு வகை.
choree
n. நெடில் குறிலிணைந்த ஈரசைச்சீர்.
choreic
-1 a. காக்காய் வலிப்புடைய.
choreograph, choreographer
n. கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர்.
choreographic
a. கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய, ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
choreography
n. ஆடற்கலை, கூடியாட்டவகைக்குரிய கலை, கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு, ஆடல் தொகுதி அமைப்பாண்மை, கூடியாட்டவகை அமைப்பாண்மை.
choriamb
n. நெடில் குறிலிணை நெடிலான நாலசைச்சீர்.
choriambic
n. நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை, (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த, நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
choric
a. கிரேக்க நாடகங்களின் ஆடல்பாடற் குழுவுக்குரிய, ஆடல் பாடல் குழுப்போன்ற.
chorioid
a. கருப்பையின் புறத்தோல் போன்ற.
chorion
n. கருப்பையின் புறத்தோல்.
choripetalous
a. (தாவ.) தனித்தனி வேறொன இதழ்களையுடைய.
chorisis
n. கிளைவழிப் பெருக்கம், கிளைப்பதன்மூலம் உறுப்புப் பலவாகும் முறை.
chorister
n. பாடற்குழு உறுப்பினர், பாடற்குழுவிலுட்பட்ட சிறுவன், பாடற் பைதல்.