English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
chowry
n. (இ.) சாமரை, ஈ யோட்டும் மயிர்க்குச்சம்.
choy-root
n. செஞ்சாய வேர் வகை.
chremastic
n. நாட்டுப் பொருளியல் பற்றிய, செல்வநிலை பற்றிய, பணவளம் பற்றிய.
chrematist
n. நாட்டுப் பொருளியல்வாதி.
chrematistics
n. செல்வ இயல், பொருள் நிலை பற்றிய ஆய்வு நுல்.
chrestomathy
n. அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி.
chrestpmathic, chrestomathical
a. தொடக்கப் பயிற்சிக்குரிய திரட்டு வடிவான.
chrism
n. திருக்கோயில்களில் பயன்படுத்தப்படும் திருமுழுக்கு நெய்.
chrismal
n. திருமுழுக்கு நெய் வைக்கப்படத்தக்க பேழை, பெயரீட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் திரை, (பெ.) திருமுழுக்கு நெய்யைக் குறித்த, திருமுழுக்குக்குரிய.
chrismatory
n. திருமுழுக்கு நெய்க்குரிய கலம்.
chrisom
n. பெயரிட்டு விழாவில் குழந்தை மீதிடப்படும் மெல்லாடை, பெயரிடுவதற்குரிய குழந்தை, ஒருமாதக் குழவி.
chrisom-child
n. பெயரிடுவதற்குரிய குழந்தை, ஒருமாதக் குழவி.
Christ
n. திருப்புதல்வர், மீட்பர், இயேசு கிறித்து.
Christ-like
n. இயேசுகிறித்து போன்ற, இயேசுநாதரின் பண்புவாய்ந்த, இயேசுநாதரின் செயலொத்த.
christen
v. பெயரீட்டு விழாவில் கிறித்தவப் பெயர் சூட்டு, திருத்தீக்கை விழாவினால் கிறித்தவனுக்கு, கிறித்துவின் பெயரால் நாமச்சூட்டு, பெயரிடு, பெயரிட்டழை, குழூஉப் பெயர் சூட்டு.
Christendom
n. கிறித்தவ உலகு, கிறித்தவ நாடுகளின் தொகுதி, உலகக் கிறித்தவர் குழு.
Christian
n. கிறித்தவர், இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர், இயேசுவைப் பின்பற்றுபவர், இயேசுவை நம்புபவர், இயேசுவின் பண்பாளர், கடவுட்பற்றாளர், நல்லார், தக்கார், மனிதர், (பெ.) கிறித்தவ, இயேசுகிறித்துவுக்குரிய, கிறித்தவ சமயஞ்சார்ந்த, இயேசுவின் திருச்சபைக்குரிய, இயேசுவைப் பின்பற்றுகிற, இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட, இயேசுவின் பண்பு அளாவிய, கடவுட்பற்றார்ந்த, தகுதிவாய்ந்த, அருளிரக்கமுடைய, மனிதப்பண்பு நிரம்பிய.
Christian-like
a. கிறித்தவத் தகுதிவாய்ந்த.
Christiania
n. பனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை.
Christianism
n. கிறித்தவ இயல்பு, கிறித்தவப் பண்பு, கிறித்தவர் சமயக்கோட்பாடு.