English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cognovit
n. (ல.) (சட்.) எதிர்வாதி செலவுப் பொறுப்பிலிருந்து தான் விடுபடுவதற்காக வாதி வழக்கின் நேர்மையை ஏற்றல்.
cohabit
v. கணவன் மனைவிபோன்று கூடி வாழ்.
cohabitation
n. பிறரோடு கூடிவாழ்தல், கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.
coheir
n. இணைமரபுரிமையாளன்.
coheiress
n. இணைமரபுரிமையுடையவள்.
cohere
v. ஒட்டி இணை, பொருத்து, இசைவுடையதாயிரு, கூடி இணை, ஒன்றுபடு, உறுப்புக்களாக இணைந்து ஒன்றுபட்டு ஒரு முழு முதலாகு.
coherence
n. இசைவிணைவு, கூட்டுப்பொருத்தம்.
coherency
n. இசைவிணைத்தன்மை, கூட்டுப்பொருத்த நிலை, முரண்பாடின்மை.
coherent
a. இசைந்திணைகிற, ஒட்டிணைவான, கூட்டிசைவான, ஒத்திசைவான, முழுதும் ஒத்தியலுகிற, கருத்து சொல் ஒத்த, அகமும் புறமும் ஒத்திருக்கிற.
coherer
n. மின் அலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
cohesion
n. ஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
cohesive
a. ஒட்டக்கூடிய, பிண்டமாக இணையும் தன்மையுள்ள.
cohibit
v. தடுத்து நிறுத்து, அடக்கி வை.
cohort
n. ரோமர் படையின் ஓர் பிரிவு, போர் வீரர்குழு, (தாவ.) பல தாவரக் குடும்பங்களின் தொகுதி, மக்கள் குழு.
cohortative
n. எபிரேய இலக்கணப்படி தொடர் இறந்த கால வினையின் நீட்டித்த வடிவம், (பெ.) ஊக்குவிக்கிற, எழுச்சியூட்டுகிற.
coif
n. தலையோடு ஒட்டினாற்போன்று அமைந்துள்ள குல்லாய், உயர்நிலை வழக்கறிஞரின் பட்டுக்குல்லாய், மகளிர் தொப்பி வகை, (வி.) குல்லாய் மாட்டிவிடு, முடி ஒப்பனைசெய்.
coiffeur
n. (பிர.) முடி ஒப்பனையாளர்.
coiffeuse
n. (பிர.) முடி ஒப்பனை மாது.
coiffure
n. (பிர.) முடி அழகுபடுத்தும் பாணி, குல்லாய் வகை, (வி.) முடியழகுசெய்.
coign, coigne
மூலைக்கல், மூலை.