English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
commandeer
v. இராணுவ சேவைக்குக் கட்டாயப்படுத்து அல்லது இராணுவ பணிக்குக் கைப்பற்று, படைத்துறைக்காகக் கைப்பற்று.
commander
n. படைத்தலைவர், ஆணை அதிகாரி, கப்பற் படையில் மாலுமிக்கு அடுத்த அதிகாரி, மேலாள், வீரத்திருவுடையவர்.
Commander-in-Chief,
முதற்பெரும் படைத் தலைவர்.
commandery
n. ஆணை அதிகாரியின் மாவட்டம்.
commanding
a. ஆண்மையுடைய, பணியவைக்கத்தக்க, மனத்தில் பதியவைக்கத்தக்க, மேம்பட்ட, முனைப்பான, விரிந்த சூழ்புலக் காட்சியையுடைய.
commandment
n. ஆணை, கட்டளை, விதி.
commando
n. போர்முனைக்கு அனுப்பப்படும் சிறப்புப் படைப்பிரிவு.
commeil faut
n. (பிர.) ஒழுங்கான, நயத்தக்க.
commemorate
v. நினைவுவிழாக் கொண்டாடு, நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று, நினைவினைப் பேணிக் காப்பாற்று, நினைவுச் சின்னம் நாட்டு, எழுத்துருவில் நிலைநிறுத்து.
commemoration
n. நினைவுவிழா, நினைவுக்காப்பு, நினைவு வழிபாடு, வழிபாட்டில் நினைவுக்குறிப்பு, வழிபாட்டில் புனிதர் பற்றிய நினைவுக் குறிப்பீடு, ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் நிறுவன முதல்வர் ஆண்டு நினைவு விழா.
commemorative, commemoratory
a. நினைவுக்குரிய, நினைவு வைக்கத்தக்க.
commence
v. தொடங்கு, தோற்றுவி, புகுமுகம் செய், முழுநிறைவான பல்கலைக்கழகப் பட்டம் பெறு.
commencement
n. தொடக்கம், பல்கலைக்கழகங்களில் பட்ட நிறைவுரிமையளிப்பு வினைமுறை, பட்டமேற்பு.
commend
v. அடைக்கலமாக ஒப்படை, தகுதியுடையது என மேவி உரை, நலம் கூறு, பரிந்துரை, புகழ்ந்துரை, அணி செய், அழகுபடுத்து.
commendable
a. பாராட்டத்தக்க, போற்றத்தக்க.
commendam
n. தற்காலிகத் திருக்கோயில் மானியம், மதப்புநிலை மானியம்.
commendation
n. பாராட்டுதல், மெச்சுதல், இறக்கும் தறுவாயிலுள்ளவர்களுக்கு இறைவனின் கருணைக்கிட்டும்படி பரிந்து இறைஞ்சுதல், புகழ்ச்சி, உயர்வினை அறிவித்தல்.
commendatory
a. மெச்சத்தக்க, பாராட்டத்தக்க, புகழ்ச்சி பொதிந்துள்ள, பாராட்டல் சார்ந்த, ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட, மானியத்துட்படுத்தப்பட்ட.
commensal
n. உணவுப்பொழுது நண்பன், உடன் உண்ணும் தோழன், கூட்டு வாழ்வு வாழும் உயிரினம், (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற, (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
commensurable
a. ஒரே அளவான, பொது அளவுடைய, ஒரே அளவால் சரியாக அளக்கத்தக்க, சரியான விகிதத்திலுள்ள.