English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
consciously
adv. நெஞ்சறிந்து, மனசார.
consciousness
n. உணர்வு நிலை, மனத்தின் விழிப்பு நிலை, நனவு, எண்ணத்தொகுதி, உணர்ச்சிகளின் திரள், எண்ணம், புல உணர்வு.
conscript
-1 n. கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டவர், (பெ.) கட்டாயப் படைத்துறைப் பணிக்குப் பெயர் பதிவு செய்யப்பெற்ற.
conscription
n. படைத்துறைக் கட்டாய ஆள் சேர்ப்பு, கப்பல் படை-விமானப்படைக்குரிய கட்டாய ஆளெடுப்பு.
consecrate
a. புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நேர்ந்துவிடப்பட்ட, தெய்விகமாக்கப்பட்ட, (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை, நேர்ந்துவிடு, தெய்வப் பண்புள்ளதாக்கு, நற்றுய்மையுள்ளதாக்கு.
consecration
n. படையல், புனிதப் பணிக்கென நேர்ந்து விடல், எழுந்தேற்றம், திருநிலைப்பாடு, திருக்கோயிற் பதவிக்கு தீக்கை செய்யப்பெறல், கடமை ஒப்படைப்பு, கருமத்தில் கண்ணாயிருத்தல்.
consecratory
a. புனிதமாக்குகிற, எழுந்தேற்றத்துக்கு உரிய.
consectary
n. தொடர் விளைவு, கிளை முடிவு, விதிதருமுறை, மெய்ம் முடிபிலிருந்து பெறுவித்த மறு முடிபு.
consecution
n. அளவை முறையான காரணகாரியத் தொடர்பு, நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, (இசை.) பல பண்திற இசைவில் ஒரே மாதிரியான இடையீடுகள் அடுத்தடுத்து வருதல், (இலக்.) சொற்களின் தொடர்பு, காலத்தின் இடைத்தொடர்பு.
consecutive
a. இடைவிடாது தொடருகிற, தொடர்ச்சியாக வருகிற, (இலக்.) விளைவைத் தெரிவிக்கிற.
consenescence, consenescency
n. இயலழிவு, பாழ், முழுநாசம்.
consension
n. பரிமாற்றமான உடன்பாடு, இருதரப்பாரும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தம்.
consensual
a. உடனிணக்கத்துக்குரிய, ஒத்திசைவான, (உட.) விருப்பாற்றல் இயலாற்றல் திறங்களின் ஒத்தியைவினால் தோற்றுவிக்கப்பட்ட.
consensus
n. பல்வேறுபாகங்களின் பொருத்தம், (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு, கருத்து ஒருமைப்பாடு, முழு ஒற்றுமை, இசைவு.
consent
n. உடன்பாடு, இசைவு, இணக்கம், இணக்கமளிப்பு, ஒப்புதல், (வி.) உடன்படு, இணங்கு, ஒப்புதலளி, சரியென்று சொல்.,
consentaneous
a. இணங்கிய, இசைவான, ஒத்தபடியான, பொருத்தமான, உகந்த, ஒருமனதான, ஒத்தியங்குகிற.
consentience
n. உடன்பாடு, உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், அரைகுறையான உணர்வு நிலை.
consentient
a. உடன்படுகிற, இணங்குகிற, ஒத்தியங்குகிற, ஒருங்கியல்கிற, அரைகுறையான உணர்வு நிலையிலுள்ள.
consequence
n. விளைவு, பயன், காரணகாரியத் தொடர்பு, முக்கியத்துவம், சமுதாய மதிப்பு, சமுதாயச் செல்வாக்கு, விளைவாக உண்டான செயல்.
consequent
n. விளைவு, காரணத்தின் இயல்பான பயன், (பெ.) செயல்விளைவான, பயனாக ஏற்பட்ட, (நில.) தொடக்கத்தில் இருந்த நிலச்சாய்வுப் போக்கின்படி செல்கிற.