English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
consequential
a. விளைவாகப் பின்தொடர்கின்ற, தற்பெருமையுள்ள.
conservancy
n. பேணுகை, ஆறு-காடு-தெரு-உடல்நலம் முதலிய வற்றின் பாதுகாப்பு, பாதுகாப்புக்குழு, பாதுகாப்புத்துறை, பாதுகாப்புச் செயல்.
conservative
a. பாதுகாத்துக் கொள்ளும் இயல்புடைய, மாறுதல் விரும்பாத, நடுத்தரமாக மதிக்கப்பட்ட அல்லது குறைத்துக் கூறப்பட்ட.
conservator
n. பாதுகாப்பவர், காவலாளர், காப்பாளர்.
conservatorium
n. இசைப்பள்ளி.
conservatory
n. களஞ்சியம், கிடங்கு, அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, இசைப்பள்ளி, (பெ.) பாதுகாக்கிற.
conserve
n. பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள், (வி.) பழுதுபடாமல் பேணு, முழுதும் வைத்திரு, விடாமல் கொள், பாதுகாத்து வை, சேமித்து வை, தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
consevation
n. பாதுகாப்புச் செயல், பேணுகை, முழுதும் பாதுகாத்தல்.
consevatism
n. பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை, புதுமை வெறுப்பு.
consevatoire
n. (பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
consider
v. கவனமாகப் பார், ஆழ்ந்து ஆராய், எண்ணிப்பார், சிந்தி, அமைந்து எண்ணு, கவனி, பரிசு கொடு.
considerable
a. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.
considerate
a. எண்ணிப்பார்க்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கவனமான, மதியுள்ள.
considerateness
n. பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
consideration
n. ஆராய்வு, சலுகை, முக்கியத்துவம், சிறப்பு, நோக்கம் அல்லது காரணம், நட்டஈடு, இழப்பீடு, பரிசு, ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை, (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
considering
prep. பார்க்குமிடத்து, நோக்குகையில், கவனித்தால்.
consign
v. கையெழுத்து அல்லது முத்திரை இடு, ஒருமுகப்படுத்து, மாறுபாடு செய், இடமாற்று, உரிமை மாற்று, நம்பகமாக ஒப்படை, கடத்து, அனுப்பு.
consignation
n. சட்டப்படி அமர்த்தப்பட்டவரிடம் ஒழுங்கு முறையின்படி பணம் கொடுத்தல், சரக்கை ஒப்படைக்கும் செயல்.
consigned
a. நம்பகமாக ஒப்படைக்கப்பட்ட.
consignee
n. சரக்கை ஏற்றுக்கொள்பவர், பொருள் ஒப்படைக்கப்பட்டவர்.