English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
conspectus
n. விரிவான மதிப்பீடு, பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை, சுருக்கம், பொழிப்பு.
conspicuous
a. தௌிவாகத் தெரிகிற, முனைப்பான.
conspiracy
n. கூட்டுச்சதி செய்தல், மறைமுக நோக்கத்துடன் ஒன்று சேர்தல், சதித் திட்டம், உடன்பாடு.
conspirator
n. கூட்டுச் சதியாளர்.
conspire
v. கூடிச் சதிசெய், ஒன்று கூடிச் செயலாற்று, திட்டமிடு, ஒருமுடிவுக்காக ஒத்தியங்கு, இசைவுறு.
constable
n. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர்.
constabulary
n. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட.
constancy
n. உறுதி, மாறாத்தன்மை, திடப்பற்று.
constant
n. (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
Constantia
n. இன்தேறல், தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது.
constantly
adv. எப்போதும், அடிக்கடி, ஓயாது, இடைவிடாமல், என்றும், ஓய்வொழிவின்றி.
constellate
v. கொத்தாகச் சேர், விண்மீன்கள் வகையில் குழுவாய்மை, நட்சத்திரபலன் பாதிக்கச்செய்.
constellation
n. விண்மீன் குழு, சிறப்புடையோர் கூட்டம், மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி.
consternate
v. திகைக்க வை, கிலியூட்டு.
consternation
n. பரபரப்பூட்டும் அச்சம், கிலி, திகைப்பு, திண்டாட்டம்.
constipate
v. தடைப்படுத்து, மலச்சிக்கல் உண்டாக்கு.
constipation
n. மலச்சிக்கல்.
constitiuent
n. இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர், மூலவர், ஆக்கக்கூறு, மூலக்கூறு, முக்கிய பகுதி, வாக்காளர் குழுவினர், தேர்தல் தொகுதியாளர், (பெ.) ஆக்கக்கூறாயுள்ள, மூலப்பகுதியாயுள்ள, முக்கியமான, உயிர் நிலையான, தேர்வுரிமையுடைய, அரசியலமைப்பை உருவாக்குகிற.
constituency
n. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, மொழியுரிமையாளர் குழுமம், வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
constitute
v. அமைப்பு உருவாக்கு, ஆக்கிப்படை, சட்ட உருக்கொடு, உரிமைப்படுத்து, நிறுவு, ஏற்படுத்து, உருக்கொடுத்து அமைவி, இணைந்து உருவாக்கு, சேர்ந்து அமை.