English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
constitution
n. அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
constitutionalist, constitutionist
n. அரசியலமைப்பின் ஆய்வாளர், அரசியலமைப்பின் ஆதரவாளர்.
constitutionalize
v. அரவியலமைப்போடிசைவி, சட்ட ஒழுங்குப்படுத்து, சட்ட அமைதிப்படுத்து, உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
constitutive
a. இணைந்து உருவாக்குகிற, நிறுவுகிற, அமைக்கும் உரிமையுடைய, முக்கியமான, ஆக்கக்கூறாயுள்ள, ஆக்கமான, கட்டுமானப்பகுதியாயுள்ள.
constitutor
n. அமைப்பாளர், உருவாக்குபவர், நிறுவனர், ஏற்படுத்துபவர்.
construction
n. கட்டுதல், கட்டிடம், கட்டுமானம், கட்டமைப்பு முறை, அடுக்கமைவு, அடுக்கப்பட்ட பொருள், நாடகக் கட்டுமானம், உருவமைதி, பொருள்கோள் வகை, பொருள் விளக்க வகை, கொள் பொருள், வாக்கியத்திலுள்ள சொற்களின் இலக்கணத் தொடர்பு.
constructional
a. கட்டும் செயலைச் சார்ந்த, கட்டிட வேலைக்கான, கட்டிடங்களைப் பயன்படுத்துகின்ற, கட்டுமான முறைக்குரிய, கட்டமைப்புக்குரிய, அடிப்படை சார்ந்த.
Constructions
கட்டுமானங்கள்
constructive
a. கட்டுதல் சார்ந்த, கட்டிடத்துக்குரிய, ஆக்கச் சார்பான, வள ஆக்கம் நாடுகிற.
constructor
n. கட்டிடம் கட்டுபவர், கட்டமைப்பவர், உண்டுபண்ணுபவர், ஆக்குநர்.
consuetude
n. வழக்கம், சட்ட வலிமையுடைய மரபு வழக்கு, சமுதாயக்கூட்டுறவு, நெருங்கிய பழக்கம்.
consuetudinary
n. தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம், சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி, மரபு வழிபாட்டுச் சடங்கு, (பெ.) வழக்கமான, மரபுவழக்கான.
Consultant
கலந்துரைஞர், தகவுரைஞர் உசாக்கையர்
consumedly
adv. மிகுதியாக, மட்டுமீறிய தன்மையில்.
consumer
n. பயனீட்டாளர், பயன்படுத்துபவர்.
consummate
v. நிறைவேற்று, செய்துமுடி, திருமண நிறைவுசெய், மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு.
consummation
n. நிறைவேற்றம், முழுநிறைவு, நிறைவேறிய செய்தி, விரும்பிய முடிவு, வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு, திருமண நிறைவு வினை, மன்றலமளி ஏற்றம்.
consumption
n. செலவழிவு, பயன்படுத்தித் தீர்த்தல், அழிவு, பயன்படுத்தித் தீர்ந்த அளவு, பயனீட்டளவு, வீணாதல், தேய்வு, மெலிவு, நோய் நலிவு, எலும்புருக்கி நோய்.
consumptive
n. எலும்புருக்கி நோய் உடையவர், (பெ.) அழிவு செய்கிற, எலும்புருக்கி நோயுடைய, எலும்புருக்கி நோய்ச் சார்பான.
cont-line
n. அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவெளி, கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வெளியிடம்.